லக்னோ, மே 5 பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் அல்ல என்பதற்கு மேற்குவங்க தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக சிவசேனா தெரிவித்துள்ளது. மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பெரும்பாலான இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இதுகுறித்து சிவசேனா வின் 'சாம்னா' பத்திரிகையில், 5 மாநில தேர்தல் தொடர்பாக தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அதில், கரோனாவை வீழ்த்துவதற்கான நட வடிக்கைகளை எடுக்காமல் பிரதமர் மோடி உள்ளிட்ட ஒட்டுமொத்த மத்திய அரசாங்கமும், மேற்குவங்க தேர்தலில் பணியாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக அத்தனை கரோனா வழிகாட்டுதல்களையும், பாரதிய ஜனதா கட்சி புறக்கணித்ததாகவும் சாம்னா சாடியிருக்கிறது. மேலும் கரோனா விதிமுறைகளை மீறி பரப்புரை செய்ததாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஆனாலும் மோடியும், அமித்ஷாவும் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் அல்ல என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் சாம்னா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment