"பெரியார் கொள்கையை முன் வைத்து தமிழக மக்கள் வெற்றியைத் தந்துள்ளனர்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

"பெரியார் கொள்கையை முன் வைத்து தமிழக மக்கள் வெற்றியைத் தந்துள்ளனர்!"

 தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் தி.மு.. தலைவருக்கு வாழ்த்து 

சென்னை,மே 5-  தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றமைக்கு திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் தலைவர்

வா.ரங்கநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.. அமோக வெற்றி!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கும்,  திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மனதார வாழ்த்துத் தெரிவிக்கிறோம்.

கோயில் கருவறையில் உள்ள தீண்டாமை ஒழிப்புக்காக காத்திருக்கிறோம். சமூகநீதி, சமத் துவம் என்ற தந்தை பெரியாரின் கொள்கைகளை முன்வைத்த திமுக கூட்டணியை தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர். பார்ப்பனீயம், மதவாதம், ஜாதிய கருத்துகளை புறந்தள்ளியுள்ளனர்.

எனவே, தமிழக மக்களின் தேர்வின் நோக் கமாக சமத்துவ சமூகத்தை நோக்கி திமுக அரசு நிச்சயம் செல்லும் என நம்புகிறோம். ஆனால் சமத்துவ சமூகத்திற்கு எதிராக, தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக அனைத்து ஜாதி அர்ச்சகர் பிரச்சினை உள்ளது. கருவறைத் தீண்டாமையை ஒழிக்க கலைஞர் அவர்கள் தொடங்கிய பணியை தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.

அதிமுக அரசு கடந்த பத்து ஆண்டுகளாக  தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது.இந்த ஆட்சி காலம் முழுக்க  குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே கோயில்களில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அனைத்து ஜாதி இந்துக்களுக்கானது என்ற கலைஞரின் திட் டத்தை  ஒரு ஜாதிக்கானதாக மாற்றினார்கள்.இதற்கு புதிய ஆட்சி  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்  எனக் கோருகிறோம் .

 இந்து அறநிலைத்துறை என்ற துறையே இருக்கக்கூடாது என காவி- கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் போன்றோர் வேலை செய்கின்றனர். அக்கோரிக்கை பிஜேபியின் தேர் தல் அறிக்கையிலும்  இடம் பெறுகிறது. இந்து அறநிலைத்துறை அரசை விட்டுப் போனால் ஆர் எஸ் எஸ், பாஜக கட்டுப்பாட்டில் போகும். அப்படிச் சென்றால் ஒருபோதும் நாங்கள் அர்ச்சகர் ஆக முடியாது.எனவே, கெட்ட உள்நோக்கத்துடன் கூடிய ஜக்கி _- பாஜகவின் தவறான பிரச்சாரத்தை முறியடிக்க தமிழகத்தில் உள்ள பெரிய கோயில் பாடல் பெற்ற ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்று பணிநிய மனத்திற்காகக் காத்திருக்கும் 203 அர்ச்சக மாண வர்களை உடனே நியமிப்பது அவசியம் எனக் கருதுகிறோம். எனவே, சமூக நீதிக்கான புதிய அரசிடம்  கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

1.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெரிய கோயில்கள் - பாடல் பெற்ற தளங்களில் அர்ச்சகர் பயிற்சி முடித்து,தகுதி திறமையோடு  இருக்கும் 203 மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப் படையில் பணி நியமனம் வழங்க  வேண்டும்.

2. தமிழ்நாட்டில்  மூடப்பட்டுள்ள சைவ, வைணவப்  பயிற்சி நிலையங்களை இந்து அற நிலைய துறை  மீண்டும் தொடங்க வேண்டும்.

3. 2020ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தமிழக அரசு விதிகளில் அர்ச்சகராவதற்கு 35 வயது என்பது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டு களாக எங்களுக்கு பணிநியமனம் வழங்கப்படாததினை கணக்கில் கொண்டு இந்த வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட வேண்டும்.

4. தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறையிடம் மட்டுமே இருக்க வேண்டும்.

5. தமிழ்நாட்டில் உள்ள  கார்ப்பரேட் சாமி யார்களின் சொத்துகள்,வருமானங்கள், நில ஆக்கிர மிப்புகள் குறித்து ஆராய  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.

6. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில் களிலும் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குட முழுக்கு நடத்தப் பட வேண்டும்.

No comments:

Post a Comment