திருமலை, மே 5- ஆந்திராவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று (5.5.2021) முதல் முழு ஊரடங்கு விதிப் பது என்று முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆந் திர மாநிலத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜயவாடாவில் ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட் டம் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நேற்று நடை பெற்றது. இந்த கூட்டம் 3 மணி நேரம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சர் பேர்னி நானி செய்தியாளர்களிடம் கூறிய தாவது: ஆந்திராவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதி கரித்து வரக்கூடிய நிலையில் இன்று (புதன்கிழமை) நண் பகல் 12 மணி முதல் முழு ஊர டங்கு உத்தரவு அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
No comments:
Post a Comment