மோடியின் தொகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் வாரணாசி, அயோத்தியில் பா.ஜ.க. படுதோல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

மோடியின் தொகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் வாரணாசி, அயோத்தியில் பா.ஜ.க. படுதோல்வி

 ராமனும் கைகொடுக்கவில்லை!

லக்னோ, மே.5-- பிரதமர் மோடி யின் மக்களவைத் தொகுதி யான வாரணாசி தொகுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல் வியை சந்தித்துள்ளது.

மத்தியிலும், மாநிலத்தி லும் ஆளும் பா...  உத்த ரப்பிரதேச மாநிலத்தில் உள் ளாட்சித் தேர்தலில், வார ணாசி, அயோத்யா மற்றும் மதுரா ஆகிய 3 முக்கிய மாவட்டங்களில், படுதோல் வியை சந்தித்துள்ளது.

மேற்கண்ட மூன்று மாவட் டங்களுக்கு அதிக முக்கியத் துவம் கொடுத்து பிரச்சாரம் செய்துவந்தது பா... வாரணாசியில், மாவட்டப் பஞ்சாயத்தில், 40 இடங்களில் 8அய் மட்டுமே வென்றுள்ளது பாஜக. வார ணாசி மற்றும் அயோத்தி பஞ்சாயத்துகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடி கட்சி பெருவெற்றியை பெற்று உள்ளது.

மதுராவைப் பொறுத்த வரை அங்கும் பாஜகவுக்கு பின்னடைவே ஏற்பட்டுள் ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வெல்லும் நிலையில் உள்ளது.

கோயில் நகரமான வாரணாசி, ராமன் அரசியல் நகரமான அயோத்தி, கிருஷ் ணன் பிறந்த இடமாக கருதப் படும் மதுரா ஆகிய மூன்று இடங்கள், பாஜகவின் இந் துத்துவ அரசியல் அஜெண் டாவிற்கான மய்யப் புள்ளி களாக திகழ்கின்றன. அயோத் தியில் ராமன் கோயில் என் றால், மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி பிரச்சினை யையும், வாரணாசியில் கியான் வபி மசூதி பிரச்சினையையும் எழுப்பி வருகிறது பாஜக.

இந்நிலையில், இந்த 3 முக் கியமான மாவட்டங்களிலும், அடுத்த 8 மாதங்களில் நடை பெறவுள்ள சட்டமன்ற தேர் தலுக்கு முன்னோட்டமாக நடைபெற்றுள்ள உள்ளாட் சித் தேர்தலில் பாஜக தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக் கது.

No comments:

Post a Comment