தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைப் பெற்றனர். அவர்களுக்கு தமிழர் தலைவர் "திராவிடம் வெல்லும்" புத்தகத்தை வழங்கினார். உடன் திராவிடர் கழகத் துணைத் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வழக்குரைஞர் அணி தலைவர் த.வீரசேகரன் உள்ளனர் (4.5.2021).
திருச்சி - திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவாரூர் வெற்றி வேட்பாளர் பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளைப் பெற்றனர். (சென்னை பெரியார் திடல், 4.5.2021).
தேர்தலில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துகளைப் பெற்றார். அவருக்கு தமிழர் தலைவர் "திராவிடம் வெல்லும்" நூலினை வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள். (5.5.2021) தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி தொகுதி சபா.ராஜேந்திரன், திட்டக்குடி தொகுதி கணேசன் ஆகியோர் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துகளைப் பெற்றனர். "திராவிடர் வெல்லும்" நூலினை கழகத் தலைவர் அளித்தார். எழுத்தாளர் இமையம் உடன் உள்ளார். (5.5.2021) மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் மகன் - ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். (5.5.2021)




No comments:
Post a Comment