காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாட்டு முக்கிய பிரமுகரும், சீரிய நாடாளுமன்ற வாதியும், நயத்தக்க நாகரிகத்துடன் மேடை களிலும், சட்டமன்ற, நாடாளுமன்றங்களி லும் பேசும் ஆற்றலாளருமான நண்பர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களது துணை வியார் ஜெஸிந்தா சில காலம் உடல்நலம் குன்றி, நேற்று (4.5.2021) மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
தனது வாழ்க்கைத் துணைவியாரை இழந்துவாடும் நண்பர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
4.5.2021 இரவு 9 மணியளவில் நண்பர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களிடம் விசாரித்து இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித் தோம்.
தலைவர்,
திராவிடர் கழகம்
5.5.2021
சென்னை

No comments:
Post a Comment