ஒற்றைத் தனிமனிதராக நின்று, தன்னையே ஒரு சட்டக் காவலனாக, தனிமனித இராணுவப் படையாக வரித்துக் கொண்டு இடையறாது நீதிமன்றங்களிலும் வீதிமன்றங்களிலும் போராடி வந்த மனித உரிமைப் போராளி ‘டிராஃபிக்’ இராமசாமி அவர்கள் 4.5.2021 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி வருத்தத்திற்குரியது.
பல செல்வாக்குள்ள இயக்கங்களால் கூட அப்படி ஒரு தொடர் சட்டப் போராட்டம் நடத்திடுவது இயலாத ஒன்று.
மனித உரிமைப் பறிப்புகள், துணிந்த அதிகாரத் தவறுகள் எங்கு ஏற்பட்டாலும் அப்போதெல்லாம் ‘டிராஃபிக்’ ராமசாமி நினைவு வரவே செய்யும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!
அவருக்கு நமது வீரவணக்கம்!
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
5.5.2021
சென்னை

No comments:
Post a Comment