உ.பி. பாஜக முதல்வர் மீது எதிர்கட்சிகள் விமர்சனம்
லக்னோ,மே27- கங்கை கரை களில் புதைக்கப்பட்ட உடல்களில் சுற்றப்பட்டிருந்த காவிநிறத் துணி களை உத்தரப்பிரதேச அரசின் பணியாளர்கள் அகற்றி வருகின் றனர். இதன் படக்காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி முதல்வர் சாமியார் ஆதித்ய நாத்தை எதிர்கட்சிகள் கடுமை யாக விமர்சித்து வருகின்றனர்.
கரோனாவின் இரண்டாவது பரவலில் உயிரிழந்தோரின் சட லங்களை கங்கை நதியில் வீசு வதும், அதன் கரைகளில் புதைப் பதும் நடைபெற்று வருகின்றன. வார ணாசி, அலகாபாத், கான்பூர், உன்னாவ் மற்றும் பலியா ஆகிய நகரங்களின் கங்கை கரைகளில் அதிகமாகப் புதைக்கப்பட்டன.
ஓரிரு அடிகள் ஆழத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் வீசியக் காற்றாலும் வெளியில் தெரியத் துவங்கின. இதை மறைக்க, அந்த உடல்களில் சுற்றப்பட்டக் காவி அல்லது மஞ்சள் நிறத்துணிகளை அகற்ற பணி யாளர்களை அம்மாவட்ட நக ராட்சிகள் அமர்த்தியுள்ளனர். பிரத மர் மோடியின் வாரணாசி தொகுதியிலும் கரோனா பாதிப் பால் உயிரிழந்து புதைக்கப்பட் டவர் களின் சடலங்களிலிலிருந்தும் காவி துணிகள் அகற்றப்பட் டுள்ளன.
பிரியங்கா சாடல்
இது குறித்து காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளரும் மாநிலப் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி கூறும்போது, ‘‘இவர்கள் உயிருடன் இருந்த போது தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை. இதில் பெரும்பாலானவர்களுக்கு உகந்த மரியாதையுடனான இறுதி நிகழ்வுகளும் செய்யப்படவில்லை. அரசு பதிவேட்டிலும் அவர்கள் இறப்பு பதிவாகவில்லை. இப் போது, அவர்களது ராம்நாமி துணியும் பிடுங்கப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோல், அம்மாநிலத்தில் இந்துக்களில் இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் சமூகப் பிரிவினர்களும் உண்டு. இந்த உடல்களுடன் கரோனாவால் பலியானவர்களும் புதைக்கப்பட் டதால் அதன் எண்ணிக்கை மிகவும் அதிகமாகத் தெரிவது, உத்தரப்பிரதேச பாஜக அரசிற்கு சிக்கலாகி விட் டது.
ராம்நாமி அகற்றலை கண் டித்து உ.பி.யின் முக்கிய எதிர் கட்சியான சமாஜ்வாதியினர் அலகாபாத்தின் கங்கை நதியில் நின்று ஆர்பாட்டம் செய்கின் றனர். மாநில துணைத் தலைவ ரான சந்தீப் யாதவ் தலைமையில் இறந்த உடல்களை உ.பி. அரசு அவமதிப்பாக முழக்கம் எழுப் பினர்.
இவர்கள் மீது ஊரடங்கை மீறியதாக தொற்று சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த போராட்டம் உ.பி.யின் வேறு சில நகரங்களிலும் தொடர் கிறது.
No comments:
Post a Comment