திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் தடுப்பூசி ஆய்வகத்தில் முதலமைச்சர் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 26, 2021

திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் தடுப்பூசி ஆய்வகத்தில் முதலமைச்சர் ஆய்வு

சென்னை, மே 26 முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை ஆய்வு செய்தார். உற்பத்தியை தொடங்கு வதற்கான உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய அவர் வலியுறுத்தினார்.

முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக் குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை நேற்று (25.5.2021) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, எச்.எல்.எல். பயோ டெக் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் விஜயன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகா னந்தம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் .ஜான் லூயிஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, முதல் அமைச்சர் மு..ஸ்டாலின், கரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாகத் தொடங்கு வதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நிதி ஒதுக்கீடு

மேலும், மத்திய அரசின் நிறுவனமான எச்.எல்.எல். நிறுவனத்திற்கு உற்பத்தியை தொடங்கு வதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment