உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 16.25 கோடியை கடந்தது
ஜெனீவா,
மே 15 உலகம் முழுவதும் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.03 கோடியாக அதிகரித் துள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண் ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 16,25,20,846 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,03,82,776 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 70 ஆயிரத்து 773 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றுக்கு தற்போது 1,87,67,297 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,607 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
No comments:
Post a Comment