'ஒன்றிணைவோம் வா' திட்டத்தை மீண்டும் தொடங்கி கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

'ஒன்றிணைவோம் வா' திட்டத்தை மீண்டும் தொடங்கி கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்

தி.மு..வினருக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அழைப்பு

சென்னை, மே 15- தமிழகத்தில் எதிர்க் கட்சியாக இருந்தபோதே, திமுக சார்பில்ஒன்றிணைவோம் வாதிட்டத்தின்கீழ் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அறிவு றுத்தலின்படி திமுகவினர் செய்து வந் தனர்.

தற்பொழுது ஆட்சிப்பொறுப்பேற் றுள்ள நிலையில், திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்ஒன்றிணைவோம் வா' திட் டத்தை மீண்டும் தொடங்கி கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண் டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

தமிழக மக்கள் அளித்த தெளிவான தீர்ப்பினால் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத் துள்ளது. இந்த வெற்றி மகிழ்ச்சிக்குரியது என்றாலும், கரோனா 2-ஆவது அலையால் கொண்டாட்டத்துக்கு உரியதாக அமைய வில்லை. கரோனாவால் பிற மாநிலங் களைப் போலவே தமிழகமும் பேரிடரை எதிர்கொண்டுள்ளது.

நாளுக்கு நாள் கரோனா பரவல் எண்ணிக்கை உயர்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் பெரும் கவலையை அளிக் கிறது. அதனால், ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பாகவே அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வேகமான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என் சிந்தை முழுவதும் இந்த எண்ணமே நெற்றிச் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.

அரசின் போர்க்கால நடவடிக்கை

மே 7ஆம் தேதி அமைந்த திமுக அரசு, கரோனா பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், உயரதிகாரிகளும், முன்களப் பணியாளர்களான மருத்து வர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத் துவத் துறையினரும் மக்கள் நலன் காப் பதில் அயராமலும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றி வரு கின்றனர்.

தமிழகத்துக்கு தினமும் 500மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டிருந்தேன். பிரதமர் விரைந்து அனுப்பிய பதிலில், உடனடியாக 419 மெட்ரிக் டன் ஆக்சி ஜனை தமிழகத்துக்கு தருகிறோம் என உறுதி அளித்தார். இது நம் தேவைக்கு ஏற்ப முழுமையான அளவு இல்லையெ னினும், மாநில அரசின் கோரிக்கைக்கு உடனடியாக செவிமடுத்த பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேவைப்படும் அளவிலான ஆக்சிஜனையும் விரைந்து அனுப்ப ஆவன செய்வார் என நம்புகிறேன்.

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், துறைசார்ந்த உயரதி காரிகளும் மேற்கொண்டுள்ளனர். தனி யார் அமைப்புகளும் ஆக்சிஜன் செறி வூட்டிகளை வழங்கி உதவுகின்றன. டிவிஎஸ் மோட்டார் - சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் சீனிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை ரூ.18 கோடிமதிப்பிலான 1,600 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி யுள்ளது.

உதவிக்கரம் நீட்டுவதில் திமுக தொண் டர்கள் எப்போதும் முன்களவீரர்களாக நிற்பவர்கள். கரோனா முதல் அலையின்போது மக்களுக்குஉதவ திமுக சார் பில்ஒன்றிணைவோம் வா' என்ற செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.மருத்துவ முகாம்கள், முகக் கவசம் - சானிடைசர் வழங்குதல், ஏழைகளுக்கு உணவு வழங்குதல், வீடு தேடிச் சென்று உதவுதல் என்று மாவட்டச் செயலாளர் முதல் கிளைச் செயலாளர்கள் வரை அனைவரும் இப்பணியில் ஈடுபட்டனர்

ஆட்சியின் சார்பில் மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகளுடன் திமுக சார்பில்ஒன்றிணைவோம் வாசெயல்திட்டத்தை மீண்டும் தொடங்கி, மக்களுக்கான உதவி களை மேற்கொள்ள வேண்டும் என திமுகவினரை கேட்டுக் கொள்கிறேன். திமுக நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களின் அடிப்படை அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது. அனைத்துக் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்களிடமும் இதே வேண்டு கோளை முன்வைத்துள்ளேன்.

களப்பணியாற்றுவோம். கண்ணீரைத் தடுப்போம். ஒன்றிணைவோம் வா... பேரி டர் காலத்தை வென்றிடுவோம் வா!

இவ்வாறு முதல்வர் மு..ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment