செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

செய்தியும், சிந்தனையும்....!

இங்கிலாந்தை பார்!

*           இங்கிலாந்தில் ஒருவருக்குக் கூட கரோனா இல்லை. 

>>           மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளான இங்கிலாந்தின் வெற்றிக்குக் காரணத்தை அறிந்து இந்தியா செயல்படுமா! 

அபச்சாரம்! அபச்சாரம்!!

*           மத நிகழ்ச்சிகளை நடத்திட உத்தரகாண்ட் அரசு  அனுமதி - உயர்நீதிமன்றம் கண்டனம்

>>           மதவிடயத்தில் நீதிமன்றம் தலையிடலாமோ!

வளர்க தொண்டறம்!

*           மதுரை ஆட்டோ ஓட்டுநர்கள் நோயாளிகளுக்கும், பயணிகளுக்கும் இலவச சேவை.

>>           மனிதன் தானாகப் பிறக்கவில்லை. எனவே தனக்காக வாழக் கூடாதவன் - தந்தை பெரியார்

காசைக் கரியாக்க வேண்டாம்!

*           என்னை சந்திக்க வருவோர் சால்வைகள், பூங்கொத்துக்கள் அளிக்க வேண்டாம்

 - முதல் அமைச்சர்

>>           நூல்களை வழங்கச் சொல்வது அறிவார்ந்த அணுகுமுறை

உறவு என்பதற்கு என்ன பொருள்?

*           உறவினர்கள் உதவ வராததால் இறந்த தாயின் உடலை தோளில் சுமந்த மகன் - இமாச்சலபிரதேசத்தில் 

>>           கடைசிவரை யாரோ? - சித்தர் பாடல்

மழலை முதல் முதியோர் வரை

*           "ஸ்டாலின் அங்கிள் உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்"

- சமூகவலைத் தளங்களில் மழலையின் வீடியோ

>>           கொண்டாடப்படும் இடத்தில் முதல்வர்

No comments:

Post a Comment