ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி:  தமிழக சட்டமன்றத் தேர்தலில் (2021) ஒரு பார்ப்பனர் கூட சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்பது தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கருதலாமா?    

- எஸ். பூபாலன், திண்டிவனம்.

பதில்: தமிழ்நாடு வெற்றிடமல்ல; கற்றிடம் என்று மற்றையோருக்கு அறிவிக்கும் வகையில் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகி, ‘பரம்பரை யுத்தத்தில்வென்று பெரியார், அண்ணா, கலைஞர் மூவருக்கும் அளிக்கும் காணிக்கை என்றே கொள்ளவேண்டும்.

(அண்ணா அவர்கள், 1967 இல் அமைச்சரவையை அய்யாவுக்குக் காணிக்கையாக்கினார் - இப்போது சட்டமன்றத்தையே பார்ப்பனரில்லா சட்டமன்றமாகத் தருகிறார்! திராவிட மண்  - பெரியார் மண் - சமூகநீதி மண் என்பது உறுதி செய்யப்பட்ட பிரகடனம் அது).

கேள்வி: நம்மால் முதன்முதலாக முன்னெடுக்கப்பட்டதிராவிடம் வெல்லும்என்ற முழக்கம் இன்று அகில இந்திய அளவில் உரக்கப் பேசப்படுவது நமது தொலைநோக்குப் பார்வைக்கு சிறந்த எடுத்துக்காட்டு அல்லவா? 

 - அருள்,  விழுப்புரம்.

பதில்: கோபாலகிருஷ்ண காந்தி இந்தக் குரல் இந்தியா முழுவதும் கேட்கவேண்டிய உரிமைக் குரல் என்று பேசியதைப் படித்துப் பாருங்கள். திராவிடம் வென்றது.

கேள்வி:  தமிழரின் போர்வாளானவிடுதலை” 87 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில் அதன் ஆசிரியராக மணிவிழா காணவிருக்கும் தங்கள் பார்வையில்விடுதலையின் மிகப்பெரிய பயனாக எதை கருதுகிறீர்கள்?   

- திராவிட விஷ்ணு, வீராக்கன்.

பதில்: இனமானப் போரில் முதல் கட்டப் போரில் வெற்றி; பண்பாட்டுப் பாதுகாப்புப் போரிலும் வெற்றி பெற்றாக வேண்டும்; எனினும் கடக்கவிருக்கும் தூரம்பற்றிய கணக்கு இனி முக்கியம்!

கேள்வி:  ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் நா.எழிலன் அவர்கள் ராகு காலத்தில் வேட்புமனு தாக்கல் செய்து அமோக வெற்றி பெற்றிருப்பதை மற்ற மற்ற வேட்பாளர்கள் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம்தானே?          

 - பெ. கண்ணன், மேல்மருவத்தூர்.

பதில்: அறிஞர் அண்ணாகூட ராகு காலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து வென்றாரே!

மருத்துவர் எழிலனின் துணிவு மற்றவர்களுக்கு சரியான பாடம்.

24 மணிநேரமும் உழைப்பவர்களுக்குநல்ல காலமே!’

கேள்வி: கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்காதவர் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்க கூடாது என்று காவிகள் கூறுவது சட்டப்படி சரியா? 

- வளவன், திருப்பூர்

பதில்: அறியாமை அல்லது அகம்பாவம் காரணமான அரசமைப்புச் சட்ட அடிப்படை புரியாது சொல்லப்படும் குற்றச்சாற்று இது!

மதச்சார்பின்மையாளர்கள் என்று காட்டுவதே மனச்சான்று-  உளமாரஎன்று பதவியேற்றது, கடவுளுக்கு சட்டமன்றத்தில் வேலை இல்லை என்பது தெளிவான ஒன்று.

இந்து அறநிலையத் துறை அமைச்சர் கடவுள் நம்பிக்கையற்றவர் அல்லர்; புரிந்துகொள்ளவேண்டும். ஹிந்து மதத்தில் கடவுள் இல்லை என்பவரும் ஹிந்து தான் என்பதை எவரே மறுக்க முடியும்?

இராமனுக்கு, தசரனுக்கு ஜாபாலி என்ற நாத்திகன் மந்திரியாக இருந்ததாக இராமாயணக் கதையே உள்ளது.

பவுத்தத்தை ஹிந்து மதப் பிரிவுபோல் அணைக்கிறார்களே, அது கடவுள் மறுப்பு மார்க்கம் அல்லவா?

அறநிலையத் துறை அமைச்சரின் வேலை நிர்வாகம் - கணக்குப் பார்ப்பது, தணிக்கை செய்வதுதான். மணியடித்து பூஜை செய்வது அல்லவே!

எனவே, உளறிக் கொட்டவேண்டாம் ஆர்.எஸ்.எஸ்., பா... அரைவேக்காடுகள்.

ஹிந்துத்துவாஎழுதிய சவார்க்கார் நாத்திகர் என்பதை இவர்களால் மறுக்க முடியுமா?

கேள்வி:  தமிழ்நாட்டில் அமைத்ததுபோல் அகில இந்திய அளவில் சிறப்பான கூட்டணியும் ஆட்சியும் அமைவதற்கான ஆக்கத்தைத் தொடங்க வேண்டியது அவசியமல்லவா? 

- ஜான் பிரிட்டோ,  நாகர்கோயில்.

பதில்: காலம் கனிந்து வருகிறது. ரசாயன மாற்றம் உருவாகும்!

கேள்வி:  தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வாய்ப்பே இல்லை என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கூறி இருப்பதின் மூலம் மாணவர்களும், பெற்றோர்களும் பெருமகிழ்ச்சி அடைவதோடு நடப்பது உண்மையான திராவிட ஆட்சி என்று திமுக வையும், முதல்வரையும் பாராட்டுவது சிறந்த ஆட்சிக்கு அச்சாரம் அல்லவா?    

 - இர. கலைவாணி, மேடவாக்கம்.

பதில் : ஆமென்! - ஆம் என்க!!

கேள்வி: வலிமையான இயக்கமான அதிமுகவை பார்ப்பனியம் சிதைத்து இன்று ஒற்றுமையில்லா, மோதல்களைக் கொண்ட கட்சியாக மாற்றிவிட்டதே - பார்ப்பனர் ஆலோசனையைக் கேட்டது தவறு என்பதை உணர்வார்களா?     

 - தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை.

பதில் : கெட்ட பின்பாவது ஞானம் வரவேண்டும்; இதுவரை வந்ததாகத் தெரியவில்லையே!

.தி.மு.. மூளையில் சிக்கியுள்ள பூணூலை அறுத் தெறிந்தால், அடிமைச் சங்கிலி தானே உடைய வழி ஏற்படும்!

கேள்வி :  ஆட்சிக்கு வந்தவுடன் செவிலியர்களுக்கு பணிநிரந்தரம், மருத்துவர்களுக்கு நிவாரணம், அவசர கால கட்டுப்பாட்டு அறை போன்றவை நாம் விரைவில் கரோனாவை வெல்ல உதவிடுமா? 

-  ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை.

பதில் : நிச்சயமாக - பணியாளர்களின் ஊக்கமும், உற்சாகமும் மருந்து, சிகிச்சையைவிட முக்கியம் அல்லவா?

கேள்வி :  இந்து அறநிலையத்துறை சார்பில் ஜீயர் பதவிக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டதற்கு பார்ப்பனப் பத்திரிகைகள் கொந்தளிக்கின்றனவே, சட்டப்படி விளம்பரம் கொடுப்பது தவறா?   

- கவிநிலா, விக்கிரமங்கலம்.

பதில் :சட்டப்படியே எல்லாம் நடைபெறுகின்றன! தி.மு.. அமைச்சர்கள், அரசு எதிலும் கவனத்தைச் சிதறவிடாது. எல்லாம் சரியாகவே நடந்துவருகிறது.

No comments:

Post a Comment