அண்ணா அமைத்தார் ஆரியரில்லா அமைச்சரவை
அவர்தம்பி கலைஞர் அவ்வழியே தொடர்ந்தார்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையேற்றார்
தொன்மைத் திராவிடத்தின் தளபதியாய் மிளிர்ந்தார்
எத்திக்கும் வாழ்த்திட அரியணை ஏறினார்
எம்தமிழர் அக
மகிழ்ந்து திராவிடப்பண் பாடினார்
திராவிடத்தை அசைத்திட எந்தக் கொம்பனுமில்லை
திராவிடரை வென்றிட எவரும் பிறந்திடவில்லை
தீர்க்கமாக தேர்தல்
களமதில் முழங்கினார்
தீர்ப்பளித்து மக்கள்
முதல்வராய் அமர்த்தினார்
அண்ணா கலைஞர் வழியில் அரசமைத்தார்
ஆரியரில்லா அமைச்சரவை மீண்டும் கண்டார்
இனங்காக்க சமர் புரிந்து தேர்ந்தார்
இனப்பகைவர் இதுகண்டு இடுப்பொடிந்து வீழ்ந்தார்
அனைத்து ஜாதியையும் அர்ச்சகர் ஆக்கிடும்
தந்தை
சிந்தித்த சமத்துவத் திட்டம்
முதல்வர் ஸ்டாலின் ஆணையில் நடந்திடும்
பெரியாரின் சமத்துவக்கொடி
கோட்டையில் பறந்திடும்
திராவிடம்
ஸ்டாலினை
தோளினில்
சுமந்திடும்
- முனைவர் அதிரடி க.அன்பழகன்

No comments:
Post a Comment