சோக மயமான நேரத்தில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவது போல கேலி செய்தல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

சோக மயமான நேரத்தில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவது போல கேலி செய்தல்!

.எஸ்.பன்னீர்செல்வன்

(கோவிட்-19 கரோனா தொற்று நோயினால் ஏற்படும்  பாதிப்பின் தீவிரத்தன்மையைப்  பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால்,  ஊடகத்தினரிடமிருந்து வரும் விமர்சனக் குரல்களை அரசு காது கொடுத்துக் கேட்டு, அதற்கேற்ப செயல்படுவது மிகமிக இன்றியமை யாததாகும்)

கோவிட்-19 கரோனா தொற்று நோயினால் நம் நாடு பேரல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சோகமயமான நேரத்தில், "இடுக்கண் வருங்கால் நகுக!" என்ற 621 ஆவது திருக்குறளைப் பற்றி அடிக்கடி நான் சிந்திக்கிறேன். தங்களது சோகத்தை விரட்டியடிப்பதற்கு மனித குலத்துக்கு உள்ள வழி சிரிப்பதைத் தவிர வேறு இல்லை என்பதால், துன்பம் வரும் வேளைகளில் நம்மை அது சிரிக்கச் சொல்கிறது. "குற்றம் சாட்டியபடி" என்னும் ஜி.சம்பத்தின் சோக நகைச் சுவை தொடரை எப்போதுமே நான் பார்த்துக் கொண்டிருப்பேன். உடனடியாக கவனிக் கப்பட வேண்டிய பல சமூக அரசியல் பிரச்சினை களின்மீது வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கருவியாக விளங்கும் சார்லி சாப்ளினின் சமூக விமர்சன வகையை சேர்ந்தது சம்பத் அவர்களின் நகைச் சுவையும். அத்தகைய நகைச் சுவையின் அடியில் அமையும் சோக உணர்வு முதலில் ஒருவரை சிரிக்க வைத்து, பின்னர் புன்னகை பூக்க வைத்து, சற்று நேரம் கழித்து இறுதியாக நாம் இருக்கும் நிலையை எதிரொலித்துக்காட்டுவதாக அமைவதாகும் அவரது நகைச் சுவை.

கன்னத்துக்குள் நாக்கை வைத்துக் கொண்டு எழுதுவது

பத்திரிகைச் செய்திகள் தருவது  போல் அல்லாமல், தக்க சாட்சியங்களுடன் நம்பத் தகுந்த உண்மைகளை தகவலாகத் தருவதும் இதன் முக்கியமான அம்சங்கள் என்னும் நிலையில், இவ்வாறு நகைச் சுவை உணர்வு கொண்ட ஒரு விமர்சனத்தின் அடிப்படைத் தேவையாக இருப்பதே, ஆட்சியாளர்களின் முட்டாள்தனத்தை எடுத்துக் காட்டுவதுதான். "காற்றில் உள்ள ஆக்சிஜன்" என்னும்  தலைப்பில் மே 9 அன்று வெளியான  அவரது செய்திக் கட்டுரையில்,  நல்லாட்சியிடமிருந்து எதிர் பார்க்கப்படும் மிகச் பெரிய செயல்பாடுகள் பற்றியும், கோவிட்-19 கரோனா தொற்று நோய் நெருக்கடியின் போது,  மத்திய அரசு உருவாக்கிய மருத்துவ  ஆக்சிஜன் பற்றாக் குறை குளறுபடியைப் பற்றியும் படிப்பதற்கு ஓர் அருமையான கட்டுரையாக விளங்குவதாகும். ஏப்ரல் 23 அன்று வெளியான அதற்கு முந்தைய அவரது  செய்திக் கட்டுரையில், கன்னத்துக்குள் நாக்கை வைத்துக் கொண்டு சம்பத் வாதாடியுள்ளார். கரோனா கிருமியை விட வேகமாக  உன்னால் ஓட முடியுமானால்,  அதனால் உன்னை எப்போதுமே பிடிக்க முடியாது என்று கூறியதுடன், அரசு பற்றிய ஆக்கப்பூர்வமான புகழைப் பாடுவதற்கு குடி மக்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டிய எண்ணற்ற முட்டாள்தனமான யோசனை களை அதில் அவர் தெரிவித்துள்ளார்.

என்றாலும், சோகமயமானது என்றோ, நகைச் சுவையானது என்றோ எந்த வகையிலும் சேராத சில குறிப்பிட்ட உண்மைகளைப் பதிவு செய்வதற்கான நேரமும் இதுதான். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது அரசின் பிரதிநிதிகளாக இருப்பவர்களின் சில கூற்றுகள்  உண்மையானவையா அல்லது நகைச் சுவை உணர்வுடன் வெளிப்படுத்தப்படும் விமர்சனங்களா என்று உண்மையில் எளிதில் நம்ப இயலாதவைகளாக ஆகிக் கொண்டு வருகின்றன. கடந்த முதல் அலை கரோனா நோயின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக,  புலம் பெயர்ந்த தொழிலா ளர்கள்தங்கள் சொந்த ஊர்களுக்கு கால்நடையாகச் செல்ல நேர்ந்த பரிதவிப்பைப்பற்றியும், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றியும் மத்திய சொலிசிடர் ஜெனரல் துஷார் மேதா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகள், சம்பத்தின் நகைச்சுவை விமர்சன செய்தியுடன் போட்டியிடாமல் போனால், அர்த்தமற்றதாகவே இருக்கும்.

ஆட்சியில் இருப்பவர்களின் கண்ணோட்டங் களுக்கும், எதையும் விமர்சனம் செய்து பார்க்க இயன்ற  ஊடகத்தினரின் கண்ணோட்டத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருப்பவர்களே குடிமக்கள். நாம் இன்று பார்த்துக் கொண்டிருப்பது கண்ணோட்டங்களில் உள்ள வேறு பாடுகள் அல்ல. அரசின் கண்ணோட்டத்தில் இருந்து வரும் செய்திகள் எவற்றிலும் பத்திரிகையாளர்கள் சந்தித்து வரும் செய்திகளின் சாயல் சற்றும் இல்லை. கரோனா-19 கொடுமையான நோயின் இரண்டாவது அலை இறுதியில் அரசின் திறமையின்மையையும், மனிதத் தன்மை இன்மையையும்  தூக்கிப் பிடிக்கும்  அரசின் தேசியம் என்பது தோலுரித்துக் காட்டப்பட்டு விட்டது.

உண்மை நிலையைப் பற்றி செய்தி அளித்தல்

உலகம் முழுவதிலும் இருந்து வெளிவரும் செய்தி களின் தன்மையைத் தேடித்தேடி வெளியிடும்  ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் நீமன் அறக்கட்டளை யின் (Nieman Lab) பரிசோதனைக் கூடம், கரோனா-19 தொற்று நோய் நிலவும் காலத்தில், இந்திய பத்திரிகை யாளர்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களை, இன்னல் களை மே 3 நாளிட்ட தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. அது கூறுகிறது : கரோனா-19 தொற்று நோய்க் கிருமிகளுடனான போரில் 140 கோடி மக்கள் தோற்றுவிடுவது போன்று தோன்றும் நேரத்தில், இந்தி யாவில் விரிந்து வரும் பொது சுகாதாரப் பேரழிவின் தீவிரத் தன்மையை எடுத்துக் கூறுவது கூட அவ்வளவு எளிதானதல்ல.  ஆனால், அது இந்த வழியில்தான் இருக்க வேண்டுமா? இக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் சுதந்திரமான செய்தித்துறை யினுடையதே ஆகும். இந்த தேச வரலாற்றின் மிகமிக மோசமான முதல் அத்தியாயத்தை எழுதவேண்டிய, பொறாமைப்பட இயலாத ஒரு சுமையை அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுடன் உண்மையைப் பேசுவது என்ற சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கும் அவர்கள், மாபெரும் எண்ணிக்கை கொண்ட மக்கள் கூடும் தேர்தல் பிரச்சார அரசியல் பேரணிக் கூட்டங்களைக் கூட்டியதில் வெளிப்படுத்திக் கொண்ட தற்பெருமை,  வல்லுநர்கள் எச்சரித்தது போல தொற்றுநோயின் இரண்டாவது அலை வரும் என்று எதிர்பார்த்து அதனை சமாளிப்பதற்கான வேலைகளை முன்கூட்டி மேற்கொள்ளத் தவறியதும், ஆக்சிஜன் போன்ற மருத்துவ மனைகளின் மிகமிக முக்கியமான தேவை களில் கடும் பற்றாக்குறை ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த அலட்சியமும் மெத்தனமும் ஆட்சியாளர்கள் இழைத்த மிகப் பெரிய குற்றங்களாகும்.  இந்த அறிக்கை மிகமிகச் சரியான, ஆனால் அதே நேரத்தில் நமக்குப் பெரும் கவலை அளிக்கும் , முடிவை அளித்துள்ளது. இந்தியாவில் உண்மையைத் தேடிக் கண்டு பிடித்து அதனை அச்சமின்றி வெளிப்படையாகத் தெரிவிக்கும் ஊடகத்தினரின் ஆற்றல் என்பது, உண்மையில் உயிர் வாழ்ந்திருப்பதற்கும்  சாவுக்கும் இடையேயான ஒரு விவகாரமாகும்.

கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட ஹத்ராஸ் வழக்கைப் பற்றி விசாரணை செய்து அறிக்கை வெளியிட முயன்றதற்காக சித்திக், கப்பான் போன்ற பத்திரிகையாளர்களையும் ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றிய செய்தி வெளியிடுவோரையும், மிகைப் படுத்தி பேசுவோரையும்  கைது செய்வதற்கு மாறாக,   மரியா தைக்குரிய அறிவியல் பத்திரிகையானதி லான்செட்' (The Lancet) எடுத்துக் காட்டியுள்ள தற்போதுள்ள பிரச்சினைகளை அரசு தீர்த்து வைப்பது ஒன்றே அரசு செய்ய வேண்டிய மிகமிக முக்கியமான கடமையாகும். ஆரோக்கிய செயல்பாடுகளின் அளவுகோல்கள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையை சுட்டிக் காட்டி, இந்தியாவில் கோவிட்-19 நோயினால் இறந்தோர் எண்ணிக்கை வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியன்று 10 லட்சத்தைத் தாண்டிவிடும் என்ற அச்சத்தை அந்த பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது. நாம் கற்பனை செய்து நகைப்பதற்கு எதையாவது நமக்கு அளிப்பதற்கு  இப்போது திருவள்ளுவரிடத்திலோ அல்லது சம்பத் திடமோ எதுவும் இல்லை. அவ்வாறு நகைப்பதற்கான விஷயங்கள் ஏதேனும் வரக்கூடுமானால் அது அரசிடமிருந்துதான் வரவேண்டும்.

 நன்றி: ‘தி இந்து', 10.05.2021

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment