தேர்தல் 2021 முடிவுகள் குறித்த காணொலி கருத்தரங்கம் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (14.5.2021) மாலை நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற அக்கருத்தரங்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் தோழர் சுப. வீரபாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
நடந்து
முடிந்த தேர்தல் கொடுக்கும் படிப்பினை என்ன? கழகங்கள் இல்லாத ஆட்சியை அமைப்போம் என்று சொல்லி வந்த பா.ஜ.க.
- அ.இ.அ.தி.மு.க. அணியில்
20 இடங்களைப் பெற்று, நான்கே இடங்களில் வெற்றி பெற்றது.
கடந்த
2016 தேர்தலில் கூட்டணியின்றி தனியாக 157 இடங்களில் நின்று அனைத்திலும் தோல்வியைப் பெரும் அளவில் தழுவியது.
அந்தப்
படிப்பினை காரணமாகவே நடந்து முடிந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் நின்றது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பா.ஜ.க.
சார்பில் போட்டியிட்ட மேனாள் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தோல்வியடைந்தார்.
கன்னியாகுமரி
தொகுதியில் அடங்கிய நாகர்கோயில் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றது பா.ஜ.க.
என்றால், மக்களவைத் தேர்தலில் அதே நாகர்கோயிலில் பா.ஜ.க.
குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மத்தியில்
இருக்கும் மோடி தலைமையிலான ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை என்பதைத் தான் இது வெளிப்படுத்துகிறது.
இந்தத்
தேர்தலில் தி.மு.க.
கூட்டணிக்கு 159 இடங்கள் கிடைத்தது என்றால், அ.இ.அ.தி.மு.க.
கூட்டணிக்கு அதன் பாதி அளவு எண்ணிக்கையில்கூட இடங்கள் கிடைக்கவில்லை; கிடைத்த இடங்கள் வெறும் 75 தான்.
அ.இ.அ.தி.மு.க.வின்
தோல்விக்கு அதன் பத்தாண்டு ஆட்சியின் போதாமை, சாதனைகள் இன்மை, ஊழல்கள், கட்சிக்குள் இரட்டைத் தலைமைக் குளறுபடிகள் என்று பல இருந்தாலும், பா.ஜ.க.வுடன்
கூட்டணி சேர்ந்ததும்
மிக முக்கிய காரணம் என்ற கருத்து அக்கட்சியினரிடமே உள்ளது.
தேர்தல்
முடிவுகளுக்குப் பிறகாவது அ.இ.அ.தி.மு.க.
பாடம் படிக்குமா என்று தெரியவில்லை.
முதல்
அமைச்சரை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்கிற அளவுக்கு அ.இ.அ.தி.மு.க.வை இளக்காரமாகக் கருதி
விட்டதே பா.ஜ.க.!
இவ்வளவுக்கும் பா.ஜ.க.வுக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் பலம் என்ன என்பதைவிட அ.இ.அ.தி.மு.க.வின் பலகீனமே பா.ஜ.க.வின் பலமாகி விட்டது.
பார்ப்பன
ஊடகங்கள் எப்படி எப்படி எல்லாம் தி.மு.க.மீது சேற்றை வாரி இறைத்தன; பிரதமர் மோடி சென்னை வந்து தி.மு.க. ஆட்சியில்
பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காது என்று பேசும் அளவுக்கு இருந்தது.
கொக்கு
ஒட்டகத்தை பழித்த கதைபோல - தமிழ் நாட்டு மக்கள் நகைத்தனர்.
மதவாதத்தையும்,
கடவுள் நம்பிக்கையையும் முதலீடாக வைத்து அரசியல் தொழில் செய்து பார்க்கலாம் என்று முண்டியடித்துப் பார்த்தனர்.
2019 தேர்தலில்
கிருஷ்ணனை முன்னிறுத்தியும், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் முருகனைத் துணை கொண்டும் ஓர் ஆட்டம் ஆடிப் பார்த்தனர். அந்தோ பாவம் - அறுபடை வீடுகள் உள்ள அத்தனைத் தொகுதிகளிலும் திமுக வென்றது தான் மிச்சம்.
நாத்திகக்
கட்சி - இந்து விரோத கட்சி என்று தி.மு.க.
பற்றிப் பிரச்சாரம் செய்து பார்த்தார்கள். நடந்தது என்னவென்றால் கோயில் நகரங்களில் எல்லாம் தி.மு.க.வே வெற்றி பெற்று
விட்டது.
தி.மு.க.வுக்கு
எதிராக எடுத்து வைத்த அத்தனைப் பிரச்சாரங்களும், குற்றச்சாட்டுகளும் எதிர் விளைவை ஏற்படுத்தி- இது பெரியார் மண்தான் - திராவிடப் பூமிதான் என்று மண்டையில் ஓங்கி அடித்துக் கூறி விட்டன.
பதவிப்
பிரமாணம் எடுத்த அத்தனை அமைச்சர்களும், தி.மு.க.வை சேர்ந்த அத்தனை
சட்டப் பேரவை உறுப்பினர்களும் கடவுளின் பேரால் உறுதி மொழி எடுக்கவில்லை. உளமார என்று கூறிதான் எடுத்தார்கள்.
குறைந்தபட்சம்
இந்து அற நிலையத்துறை அமைச்சராவது
கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்கக்
கூடாதா என்று விமர்சனம் செய்கிறார்கள்.
காணொலியில்
திராவிடர் கழகத் தலைவர் சரியாகவே பதில் கூறினார். "இந்து மதத்தில் நாத்திகத்திற்கு
இடம் உண்டே - பவுத்தத்தையும்
இந்து மதத்தின் ஒரு பிரிவாகத் தானே சொல்லுகிறார்கள் - பவுத்தம் கடவுளை ஏற்றுக் கொண்டுள்ளதா? தசரதன் அமைச்சரவையில் ஜாபாலி என்ற நாத்திக அமைச்சர் இருந்தார் என்று எழுதப்பட்டுள்ளதே" என்ற கழகத் தலைவரின் விளக்கத்திற்கு சங்பரிவார்கள் எங்கிருந்து பதில் கூறப் போகிறார்களாம்!
No comments:
Post a Comment