ராஷ்டிரிய லோக் தள கட்சியின் நிறுவனர் அஜித்சிங் அவர்கள் இன்று (6.5.2021) உத்தரப் பிரதேசத்தில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்து கிறோம்.
அமெரிக்காவில் கணினிப் பொறியாளராக இருந்தவர்; சவுத்ரி சரண்சிங் அவர்கள் மறைவிற்குப் பின் இந்தியாவுக்கு வந்து அரசியலில் ஈடுபட்டார். மத்திய அமைச்சராக இருமுறை இருந்தவர்.
நம்மிடம் மிகுந்த அன்பு செலுத்தியவர். சென்னை வந்தபோது பெரியார் திடலுக்கு அவர் வருகை தந்து, திராவிடர் கழகப் பணிகளை வியந்து பாராட்டிய பெருமகனார்.
சமூகநீதிக் களத்தில் அவரது மறைவு ஒரு பெரும் பள்ளத்தை ஏற்படுத்துவதாகும்.
அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ராஷ்டிரிய லோக் தளம் (RLD) கட்சியினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் உரித்தாகுக!
அஜித்சிங் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.5.2021

No comments:
Post a Comment