கல்வித் தந்தை டாக்டர் கே.சி.இராஜாபாதர் மறைவு: கழகத் தலைவர் இரங்கல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

கல்வித் தந்தை டாக்டர் கே.சி.இராஜாபாதர் மறைவு: கழகத் தலைவர் இரங்கல்!

திண்டிவனத்திலும், நெய்வேலியிலும் சிறப்பான வகையில் பல கல்வி நிறுவனங்களை நிறுவி, மிகச் சிறப்பான கல்வியை, கிராமப்புற மாணவர்களுக்கும் அளித்த கல்வி வள்ளலும், திராவிடர் இயக்க ஆதரவாளராகவும் திகழ்ந்தவருமான டாக்டர் இராஜாபாதர் அவர்கள் நேற்று (5.5.2021) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

சிறந்த கல்வித் தந்தை மட்டுமல்ல - நிறைந்த பண்பாளர்; எவரிடத்திலும் அன்பொழுகப் பேசக் கூடியவர்; நமது கடலூர் மண்டலத் தலைவர் ஆர்.பி.எஸ். என்று அழைக்கப்படும் அரங்க.பன்னீர்செல்வம் அவர்களின் சம்பந்தி - உறவுக்காரரும்கூட!

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்து உறவுகள், நண்பர்கள், ஆர்.பி.எஸ். போன்ற அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் உரியதாகுக!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

6.5.2021

No comments:

Post a Comment