கவிஞர் கலி.பூங்குன்றன்
சென்னை,
மே 14 “இடஒதுக்கீடுக்கு ஆபத்து” என்னும் தலைப்பில் காணொலி மூலம் திராவிடர் கழகத்தின் சார்பில் கருத்தரங்கம் நேற்று மாலை 6.30 மணிக்கு (13.5.2021) நடைபெற்றது.
திராவிடர்
கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி தொடக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
60 நிமிடங்கள் கருத்துரை புகன்றார்.
எடுத்த
எடுப்பிலேயே இடஒதுக்கீட்டைத் திணித்ததே பார்ப்பனர்கள்தான் - மனுதர்மம் தான் என்று சொன்னார். பிறப்பின் அடிப்படையில் வருணதருமம் - இந்த வருணத்துக்கு இந்தத் தொழில் என்று பிரித்ததே இந்து தர்மமான வருண தர்மம் தானே? என்று வினாவை எழுப்பினார்.
ஆண்டாண்டு
காலமாக வாய்ப்பும், உரிமையும் மறுக்கப்பட்ட மக்களை கை தூக்கி விடுவதுதான் இடஒதுக்கீடு
என்றார்.
இடஒதுக்கீடுக்கு
என்று ஒரு வரலாறு உண்டு, மகாராட்டிரத்தில் ஜோதி பாபூலே, சாகுமகராஜ் என்று தொடங்குகிறது.
ஜாதி
அடிப்படையில் இடஒதுக்கீடு என்று கேட்கின்றனர். ஆம் ஜாதி இருக்கும் வரை - ஜாதி ஒழிக்கப்படும் வரை ஜாதி
அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது தவிர்க்கப்பட முடியாததுதான். அந்த ஜாதிதான் கல்வி உரிமையை மறுத்தது - இதுவும் கூட ஒரு தடுப்பூசி அணுகுமுறைதான்.
ஜாதியின்
அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்போர், ஜாதியை ஒழிக்கச் சட்டம் கொண்டு வரட்டுமே!
ஒரே
தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பார்கள் - எல்லோரும் ஒரே ஜாதி - ஒரே நிலை - சரி சமம் என்று சட்டம் செய்யட்டுமே! அப்படி
சட்டம் செய்தால், செயல்பாடுக்கு வந்தால் இழப்புகள் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு இடஒதுக்கீடு தேவையில்லை என்று கூற நாங்கள் தயார்தான் என்றார் தமிழர் தலைவர்.
ஏதோ
இப்போதல்ல - இதற்கு முன்பே கூட சொல்லிதான் வருகிறார். ஆனாலும் எதிர்தரப்பிலிருந்து பதிலைத்தான் காணோம்!
இன்றைய
தினம் அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கோட்பாடாக இருக்கக் கூடிய சமூக நீதியை, இடஒதுக்கீட்டை அதன் நோக்கத்தை அதற்கான அடிப்படை வேரினையே வெட்டும் வேலையில் பார்ப்பன - ஆதிக்கக் கட்சியாக இருக்கக் கூடிய பா.ஜ.க.
அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸின் கட்டளைப்படி செய்து கொண்டு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார் கழகத் தலைவர். அதைக் கூறுவதற்கு ஆதாரம் இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பாகவத் இடஒதுக்கீடை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையா?
இடஒதுக்கீடு
குறித்து ஆர்.எஸ்.எஸின் ஏடான ‘பஞ்சான்யா’ வுக்கு அவுட்லுக் (20.9.2015) ஏட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அளித்த பேட்டியில் கூறியது என்ன?
“இந்தியா
போன்ற மக்களாட்சி நாட்டில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும் போதுதான் சமூகத்தில் அமைதி நிலவும். ஆனால் இங்கே பலரது வாய்ப்புகளைப் பறித்து சிலருக்கு மட்டுமே கொடுக்கும் சூழ்நிலை இடஒதுக்கீடு என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த நாடு கலாச்சாரத்தில் முதுமை பெற்ற நாடாகும். கலாச்சார காவலர்கள் இந்த நாட்டை இன்றளவும் புனிதம் கெடாமல் வைத்துள்ளனர். இடஒதுக்கீடு என்ற பெயரில் கலாச்சார காவலர் களை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் தலைமுறைகளுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் பெரும்பான்மையான மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தி விடும்.
இந்த
நாட்டில் வாழும் அனைவரின் நன்மைக்காக ஆட்சியாளர்களின் சிந்தனை இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பாடுபடுகிறார். ஆகவே வளர்ச்சிக்காக தியாகம் செய்யத் துணிச்சலும் இருக்கும் மக்களை அரசு வஞ்சிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபடும் போதுதான், இதுபோன்ற இடஒதுக்கீட்டுத் தேவைக்காக போராட்டங்கள் வெடிக்கும். ஆகவே இதுவரை உள்ள இடஒதுக்கீட்டு முறையை மாற்றியமைப்பது அத்தியாவசியமான ஒன்றாகும். அரசு குழு ஒன்றையமைத்து இடஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்“ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் கூறிய இந்தக் கருத்துக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்
‘விடுதலை’யில் (22.9.2015) வெளியிட்ட அறிக்கை என்னவோ அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது.
ஆசிரியர்
சொன்னது என்ன?
“ஆர்.எஸ்.எஸ்.. தலைவரின் கருத்து வருகிற ஆபத்திற்கு ஒரு முன்னோட்டமாகும். பின்னாளில் அவர்கள் சிந்திப்பது என்னவென்றால், இப்பொழுது இருக்கின்ற அடிப்படை அளவு
கோலை அகற்றி விட்டு, பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப் பட்டவர்கள் - இவர்களுக்குக் கிடைக்கின்ற இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படை என்கிற முறையில் இட ஒதுக்கீட்டை மாற்ற
வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு அந்தக் கமிட்டி அமைக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறது.
இந்தத்
துறையில் மட்டுமல்ல, கல்வித்துறையிலும் கூட தனியாக ஒரு வாரியம் அமைத்து, கல்வித் திட்டத்தையே மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கருத்துகளைச் சொல்லிக் கொண்டு ஆழம் பார்க்கிறார்கள்.
எனவே,
இந்தக் காலக்கட்டத்தில், காலம் காலமாக நம்முடைய நாட்டில் தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராசரும், திராவிடர் கழக இயக்கமும் மிகப்பெரிய அளவில் போராடி வெற்றி கண்ட, பாதுகாத்த இடஒதுக்கீடு, சமுக நீதி என்பதற்குப் பெரிய அறைகூவல் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது” என்று ஆறு ஆண்டுகளுக்கு முன் தமிழர் தலைவர் தொலைநோக்கோடு சொன்னது தானே இப்பொழுது நடந்திருக்கிறது.
2016ஆம்
ஆண்டு பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை (27ஆம் வரிசை) கூறுவது என்ன?
இடஒதுக்கீடு - உள் ஒதுக்கீட்டின் பலன் என்ன?
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு (29.5.2009) உள் ஒதுக்கீடு வழங்கிய அதன் பலன் என்ன தெரியுமா?
இந்த உள்ஒதுக்கீடு வருவதற்கு முன் அருந்ததியர்த் தோழர் களுக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த இடங்கள் வெறும் 13. 2009இல் கிடைத்த இடங்களோ 29. 2009-2010இல் கிடைத்த இடங்களோ 56. நான்கரை மடங்கு அதிகம். அதே போல பொறியியல் கல்லூரிகளில் 2007-2008இல் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 44, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பின் 2009-2010இல் கிடைத்த இடங்கள் 1165, பார்ப்பனர்கள் ஆத்திரப் படுவதற்கும், இடஒதுக்கீட்டை ஒழிக்கக் கூப்பாடு போடுவதற்கும் இதுதான் காரணம்!
மதரீதியாக
இடஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தில் இடமில்லை. மதம் மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுடன் சேர்த்து சலுகை வழங்குவதால் ஏற்கெனவே உள்ள ஹிந்துக்களின் அந்தப் பிரிவினருக்கே பாதிப்பு ஏற்படும். தற்போது சலுகை பெற்ற பிரிவிலும் கூட வறுமையில் உழல்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கு வருமான அடிப்படையில் சலுகை வழங்குவதன் மூலம் சிறுபான்மை மதத்தினர் உட்பட அனைத்து பிரிவினரும் பயன்பெற வசதி செய்யப்படும் என்பது பிஜேபியின் தேர்தல் அறிக்கை.
வருமான
அடிப்படையில் இடஒதுக்கீடு என்று கூறியுள்ளது சட்டவிரோதமாக ஒன்றைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்து, ஆட்சிக்கு வந்தபின் அந்த சட்டவிரோதத்தை செயல்படுத்தியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் இது சட்ட விரோத அரசே!
இந்தியாவின்
அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் என்பது இடஒதுக்கீட்டுக்காகவே கொண்டு வரப்பட்டது. அதற்குக் காரணம் தமிழ்நாடுதான் - தந்தை பெரியார்தான்.
1928 முதல்
சென்னை மாநிலத்தில் இருந்து வந்த இடஒதுக்கீடு செல்லாது என்று ‘சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தைக் காட்டி வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்புக் கூறிய காரணத்தால் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே கொதித்து எழுந்தது.
தமிழ்நாட்டின்
போராட்டத்தை எடுத்துக் காட்டிதான் பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு காட்டினார்.
அந்தத்
திருத்தம் என்ன சொல்லுகிறது?
சமுகரீதியாகவும்,
கல்வி ரீதியாகவும் பிற்படுப்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட உறுதி செய்தது. அப்பொழுதே கூட பொருளாதார ரீதியாக என்ற அளவுகோலையும் சேர்க்க
வேண்டும் என்று ஜன சங்க நிறுவனரான
தீனதயாள் உபாத்தியா ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
வாக்கெடுப்புக்கு
விடப்பட்டத்தில் பொருளாதாரத்துக்கு ஆதரவாக அய்ந்து வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி சமுகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்ற அளவுகோலின் படிதான் இடஒதுக்கீடு இருந்து வருகிறது.
1951ஆம்
ஆண்டில் பொருளாதார அளவு கோலைக் கொண்டு வர முயற்சி செய்தவர்கள்
இப்பொழுது ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கும் காரணத்தால், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஒரு சட்டத்திருத்தம் (திருத்த எண்.103) கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டார்கள்.
இடஒதுக்கீட்டில்
பொருளாதார அளவுகோல் செல்லாது என்று ஏற்கெனவே பலமுறை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததே!
பி.வி.நரசிம்மராவ் பிரதமராக
இருந்த போது பொருளாதாரத்தில் பின் தங்கியோர்க்கு என்று 10 விழுக்காடு இடஒதுக்கீடு செய்த போது உச்சநீதிமன்றம் செல்லாது என்று நிராகரித்து விட்டதே!
2016ஆம்
ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் உள்ள பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு வழங்கி அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. பா.ஜ.க.
ஆளும் குஜராத் இதனை
எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வு குஜராத் சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதே. ராஜஸ்தான் மாநிலம் கொண்டு வந்த பொருளாதார அடிப்படை சட்டமும் நீதிமன்றத்தால் செல்லாது என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசே - சட்டத்துக்கு விரோதமாகவும், நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராகவும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது - பச்சையான சட்ட விரோதம் - நீதிமன்ற விரோதம் தானே!
(நாளையும்
உண்டு)


No comments:
Post a Comment