திருவண்ணாமலையில்
திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கவுதமன் (வயது 71) அவர்கள் உடல் நலக் குறைவால் சென்னையில் ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் நேற்று (9.5.2021) இரவு மறைவுற்றார் என்ற துயரச் செய்தி நம்மை மிகவும் வேதனைக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கியது!
மறைந்த
மானமிகு தோழர் கவுதமன் அவர்கள் சீரிய கொள்கை வீரர், சென்னைக்கு அவர் வந்தபின் பெரியார் திடல் நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்வார். ‘விடுதலை' சந்தா பெற்றுத் தருவதில் கடுமையாக உழைப்பவர். அவரை மருத்துவமனையில் எப்படியும் காப்பாற்றிட முயற்சித்தும் பலன் அளிக்காதது நமக்கு மிகப்பெரிய துயரத்தை அளிக்கிறது!
அவரை
இழந்து வாடும் அவரது இணையர் சாரதா, மகன் அருண்மொழி வர்மன், மகள் அமுதப்பிரியா, குடும்பத்தவர்கள், கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
அவருக்கு நமது வீரவணக்கம்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.5.2021

No comments:
Post a Comment