தோப்பூரில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படும்..!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மதுரை, மே 16 மதுரை அரசு மருத்துவமனையில் Zero delay அடிப்படையில் ஆக்சிஜன் உடன் 150 புதிய படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது என்றும், தோப்பூரில் கூடுதலாக ஆக்சிஜன் 500 படுக்கைகள் ஒரு வாரத்தில் தயாராகி விடும் எனவும் மதுரையில் மருத் துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது பேசிய கூறிய தாவது:
நோய் தொற்று அதிகரித்து இருப்பதால் கூடுதல் ஆக்சி ஜன் படுக்கைகள் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. அதன் படி, தோப்பூரில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்படும். மதுரைக்கு வழங்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து 500லிருந்து ஆயிரமாக அதிக ரிக்கப்படும். முதலில் ரெம் டெசிவிர் மருந்து சென்னை யில் மட்டும் விற்கப்பட்டது. முதல்வர் உத்தரவிட்டதை யடுத்து 5 மாவட்டங்களில் கூடுதலாக விற்பனை தொடங் கியது. கடந்த 4 நாட்களாக மருந்துகள் விற்பனை செய்யப் படுகின்றன என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூடுதலாக ரெம் டெசிவிர் மருந்து கிடைக்கும். கூடுதலாக 20 ஆயிரம் மருந் துகள் வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
14.5.2021 அன்று 80 மெட் ரிக் டன் ஆக்சிஜன் சென்னை வந்தது. அதைப் பிரித்து விநி யோகம் செய்து கொண்டிருக் கிறோம். ஸ்டெர்லைட் ஆலை யில் பிரதான குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் ஆக் சிஜன் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது. 2 அல்லது 3 நாள்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி தொடங்கும் என் றார். மேலும் ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிர மணியன், முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும் என அனைத்துக் கட்சி கூட் டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள் ளது. உயரதிகாரிகளும் அதையே பரிந்துரைத்துள்ள னர். அதனடிப்படையில் ஊர டங்கை கடுமையாக்குவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment