சென்னை, மே 16 ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு-போராட்டம் தொடர் பான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய் யப்பட்டுள்ளது. ஆணைய தலைவர் அருணா ஜெகதீசன் இடைக்கால அறிக் கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னிடம் வழங்கினார். தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டு நடந்த காவல்துறை துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில்
13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர் பாக விசாரணை நடத்துவ தற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெக தீசன் தலைமையில் ஒருநபர் ஆணை யத்தை அமைத்தது.
இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு இன்று தாக்கல் செய்துள்ளது. நீதிபதி அருணா ஜெக தீசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை வழங்கினார். மேலும், கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சரிடம் வழங்கினார்.

No comments:
Post a Comment