கரோனா கொடுந்தொற்று காரணமாக கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவுடன் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலி நகர கழக அமைப்பாளர், கொள்கை வீரர், தோழர் தெ.இராதாகிருட்டிணன் அவர்கள்
(வயது 62) இன்று (26.5.2021) புதுவையில் ஜிப்மர் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமும், துன்பமும் அடைந்தோம்.
சீரியக் கொள்கை வீரரான அவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, நம் இயக்கத்திற்கும், அவரது நட்பு வட்டத்தினருக்கும் கூட பெரும் இழப்பாகும்.
மறைந்த தோழர் இராதாகிருட்டிணன் அவர்களது மகன் பொறியாளர் அறிவழகன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தேன். அவருக்கு நமது வீரவணக்கம்.
திராவிடர் கழகம்
சென்னை
26.5.2021

No comments:
Post a Comment