கழக இளைஞரணி தோழர் இரா.கதிர்வேல் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

கழக இளைஞரணி தோழர் இரா.கதிர்வேல் மறைவு

தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், சித்தாதிகாடு கிராமத்தை சேர்ந்த கழக இளைஞரணி தோழர் இரா.கதிர்வேல் (வயது 34) இன்று காலை மின்கம்பி   அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து மறைவுற்றார் என்பதை மிகுந்த வருத்தத்துடன்

தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது 2 வயது மகன் அன்புச்செல்வன் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ரம்யா என்ற வாழ்விணையர் உள்ளார்.

மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன் மூலமாக மாணவர் பருவத்தில் இரா. கதிர்வேல், அவரது சகோதரர் இரா.மணிகண்டன் இருவரும் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டனர்.

பேராவூரணி ஒன்றியம் சித்தாதிகாடு கிராமத்தைச் சேர்ந்த இரா.கதிர்வேல்,  பொறியியல் படிப்பு வல்லம் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் படித்தார். பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவராக இருந்து சிறப்பாகப் பணியாற்றி ஏராளமான இளைஞர்களை கழகத்தின் பக்கம் ஈர்த்தவர். 2018 பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ரம்யா என்பவரை வாழ்க்கை இணையேற்பு (பேராவூரணியில்) செய்துகொண்டவர் தற்பொழுது தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்து செயல்பட்டு வருகின்றார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அய்.டி. கம்பெனியில் பணியாற்றி வருகின்றார்.

தற்போது பெரும் தொற்றுநோய் காரணமாக வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டும் என்கின்ற அடிப்படையில் அவரது சொந்த கிராமம் சித்தாதிகாடு வீட்டில் இருந்து பணி செய்து கொண்டிருந்தார் இந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டார். பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்துவிட்டார் என தகவல் பேரிடியாக, பேரிழப்பாக, நம் நெஞ்சை  பிளக்கும் செய்தியாக நம்மை தாக்கியது ஏற்க முடியாத பேரிழப்பு பேராவூரணி பகுதியில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் குடும்ப ரீதியாக பழகி அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் கல்வி, வேலைவாய்ப்புகள் வரை வழிகாட்டியாக திகழ்ந்தவர் அதன் மூலமாக இயக்கத்திற்கு அந்த பகுதியில் ஏராளமான இளைஞர்களை ஈர்த்தவர் கொள்கை தெளிவு உள்ளவர்.  தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மாறாப் பற்று கொண்டவர். இளம்வயதில் கொள்கை தெளிவு, நாணயம், ஒழுக்கம், பிறருக்கு வழிகாட்டும் தன்மை, ஒருங்கே பெற்ற ஓர் இளைஞரை நாம் இழப்பது  திராவிடர்கழகத்திற்கு, பேராவூரணி பகுதி மக்களுக்கு, இளைஞர்களுக்கு, எல்லாவற்றிக்கு மேலாக அவரது குடும்பத் திற்கும், அவரது வழ்விணையர் ரம்யா அவர் களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். வீரவணக்கம்! வீரவணக்கம்!|

தொடர்புக்கு அவரது சகோதார் இரா.மணிகண்டன்

கழக இளைஞரணி பொறுப்பாளர்: 78688 01353

No comments:

Post a Comment