கொட்டினால்தான் தேள்!
* ஆக்சிஜனை அதிக விலைக்கு விற்பவர்கள்மீது குண்டர் சட்டம்.
- முதல் அமைச்சர் உத்தரவு
>> அடக்கினால்தான் அடங்குவார்கள்.
புராண கல்விக் கொள்கை
* புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை.
>> 'புதியது' என்ற பேரில் 'பழையது' - என்று பொருளோ!
யாருக்கோ வந்த விருந்தா?
* தமிழ்நாடு முழுவதும் கடந்த 36 நாட்களில் முகக்கவசம் அணியாத 44 லட்சம் பேர்கள்மீது வழக்கு.
>> ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும் - பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கணும் என்பது பழமொழி.
வேதனையே இந்தியாவின் சாதனை!
* சீனாவின் விண்கலம் செவ்வாயில் இறங்கி சாதனை!
>> வைரசும் - கடவுளின் படைப்புதான் - உ.பி. அமைச்சர் திரிவேந்திரசிங் ராவட் கண்டுபிடிப்பு!
செயல்படும் அரசு
* தமிழ்நாட்டில் 2635 மய்யங்களில் ஒரே நாளில் கரோனா தடுப்பூசி
>> கரோனாவா - மனித சக்தியா ஒரு கை பார்ப்போம்.
சத்தம் போட்டால் நிசப்தம்!
* ஊரடங்கிலும் ஓயாத ஆம்புலன்ஸ் சத்தம்!
>> ஊர்வாயை மூடினாலும் ஆம்புலன்ஸ் வாயை மூட முடியுமா?
'வாழ்க ஜனநாயகம்!'
* தடுப்பூசி பற்றாக்குறை - பிரதமர் மோடியை விமர்சித்து சுவரொட்டி ஒட்டிய 15 பேர் கைது.
>> இம் என்றால் சிறைவாசமா?
எப்படியும் உயிர்ப் போகப் போகிறது என்ற எண்ணமா?
* சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை.
>> உளவியல் மருத்துவர்களையும் அமர்த்துக!
உண்மையாகவா?
* பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை யாரும் கூற வேண்டாம்!
-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
>> பகுத்தறிவு என்றால் பித்தலாட்டம் என்று எழுதும் 'துக்ளக்' குருமூர்த்திகளுக்கு அர்ப்பணம்!
No comments:
Post a Comment