பெங்களூரு, மே 5- பெங்களூரு வில் அரசு சார்பில் மருத்துவ மனைகளில் கரோனா நோயா ளிகளுக்கு படுக்கைகளை ஒதுக்குவதில் ஊழல் நடந்து உள்ளதாக ஆளும் பாஜக அரசின் எம்.பி.யே குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர் பாக இரண்டு தரகர்களை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கருநாடகத்தில் கரோனா 2ஆம் அலையின் தாக்கம் தீவி ரமடைந்ததை அடுத்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா, கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ மனைகளில் இடம் அளிப்ப தில் பெரும் ஊழல் நடந்து வருவதாக பகிரங்க குற்றச் சாட்டை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பெங்களுரு வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்து எடி யூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். அரசு சார்பில் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற கள்ளச்சந்தையில் 3 நபர்க ளுக்கு உள்ளதற்கு ஆதாரம் உள்ளதாக அவர் கூறி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனிடையே நோயாளிக ளுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்க பணம் வாங்கியதாக ஒரு பெண் உட்பட 2 தரகர் களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருவரும் 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை கரோனா நோயாளிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு படுக்கை வசதிகளை செய்துகொடுத் தது தெரியவந்தது. இதற்கு பெங்களூரு மாநகராட்சியில் பணிபுரியும் பல ஊழியர்கள் உதவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையி னர் விசாரிக்க உத்தரவிட்டு உள்ளதாக மாநகர காவல் துறை ஆணையர் கமல் பண்ட் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment