தஞ்சை,
மே 12 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், தலையாமங்கலம் ஊராட்சி, மன்றாயர் குடிக்காடு நாடக இயக் குநர், கழகத்தோழர் மன்றோ மதியழகன், அன்பழகன் ஆகியோரின் தந்தையார் கு.இராசு அவர்களின்
நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு
17-04-2021 அன்று மாலை 6 மணியளவில் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தலைவர்
சி.அமர்சிங் தலைமை வகித்து நினைவுரையாற்றினார். முன்னாள் அமைச்சர் அழகு.திருநாவுக்கரசு அவர்களின் மகன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் அழகு. சண்முக ராஜா அவர்கள் படத்தினை திறந்து வைத் தார்.
கழகப்
பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், மாவட்ட செயலாளர்
அ.அருணகிரி, ஒன்றியத்தலைவர் த.ஜெக நாதன்,
ஒன்றிய செயலாளர் ஆ.லெட்சு மணன்,
மாநில பக . துணைத்தலைவர் கோபு. பழனிவேல், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வெ.நாராயணசாமி, பெரியார்
வீரவிளையாட்டு கழக மாநில செயலாளர் நா. இராமகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கன்னை சரவணன், ஒன்றிய துணைத்தலைவர் இரா.துரைராசு, நெல்லுப் பட்டு இராமலிங்கம் உள்ளிட்டோர் நினைவுரை யாற்றினார்.
உறவினர்கள்,
நண்பர்கள், கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பெரியார்நகர் அ.உத்திராபதி நிகழ்வை
ஒருங்கிணைத்து நடத்தினார்.

No comments:
Post a Comment