மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 12, 2021

மறைவு

* விழுப்புரம் மாவட்ட  இளைஞரணியின் தலைவர். .பழனி வேல், திண்டிவனம் நகர இளைஞரணி தலைவர், ஓவியர் .செந்தில் ஆகியோரது தாயார் .ஞானசுந்தரி  (வயது.71) நேற்று 11.5.2021 அதிகாலை 4 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை  அறிவிக்க வருந்துகிறோம்அவரது உடல் அடக்கம் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட கழக சார்பில் விழுப்புரம் மண்டல தலைவர் .மு.தாஸ் தலைமையில் அன்னாரின் குடும்பத்தாருக்கும் கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலுடன் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.

* திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டை, அர்ஜூனன் தெருவைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்பு வீரர் பி.பரமசிவம் (வயது 84)  (தென்னக இரயில்வே ஓய்வு)  உடல் நலக்குறைவால் இன்று (12.5.2021) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

 தகவலறிந்து திருச்சி மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் கனகராஜ் காமராஜ் மற்றும் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பரமசிவம் உடல் அடக்கம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. பரமசிவத்திற்கு காமராஜ், தமிழ்மணி  ஆகிய மகன்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment