டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
· லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை வரை வில், அந்த தீவின் புனிதத்தன்மை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், அதை சீர்குலைக்கும் வகையில் மக்கள் பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
· இந்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு அடிபணிவது தொடர்பான ட்விட்டர் நிறுவனத்தின் விளக்கம், அடிப்படையற்றது, தவறானது மற்றும் இந்திய அரசை அவமதிப்பது போன்றது என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
· கரோனா பரவல் குறித்து தனது அரசின் விஞ்ஞானிகள் கூறிய எச்சரிக்கையையும் மீறி பிரதமர் மோடி தேர்தல் பரப்பரை மற்றும் கோயில் பயணம் மேற்கொண்டார். தற்போது நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகும் நிலையில், பிரச்சினையை மாநிலங்கள் பக்கம் தள்ளி விடுகிறார் என ஏழாண்டு மோடி
ஆட்சி பற்றி மூத்த ஊடகவியலாளர் கரன் தப்பார் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
டெக்கான்
கிரானிக்கல், சென்னை:
· செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் மய்யத்தை தமிழக அரசிடம் குத்தகைக்கு விட வேண்டும். பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடிதம். மத்திய அமைச்சரிடம் தொழில் துறை அமைச்சர் நேரில் வலியுறுத்தல்
எகனாமிக் டைம்ஸ்:
· மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் உழவர் போராட்டத்திற்கு மத்திய அரசு தனது மவுனத்தைக் கலைத்து, அதன்
அக்கறையற்ற போக்கைக் கைவிட வேண்டும் என மோடி அரசுக்கு
சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
· உச்ச நீதிமன்றத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டை எதிர்த்த
‘தகுதி காப்போம்; நாட்டைக் காப்போம்’ என்ற இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பான அமைப்பின்
நிர்வாகிகள் பா.ஜ.க.
- ஆர்.எஸ்.எஸ். தொடர்புடையவர்கள் என மகாராஷ்டிரா மாநில
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
- குடந்தை
கருணா
28.5.2021
No comments:
Post a Comment