முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன்20- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகத்தையும், கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பையும் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (19ஆம் தேதி) தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.
2 முதல் 12ஆம் வகுப்பு வரை
இதற்காக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 2 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடங்களின் புதிய காணொ லிகள் வடிவமைக்கப்பட்டு தயார்நிலையில் இருந்தன. இந்நிலையில் புதிய கல்வி யாண்டுக்கான பாடங்கள் ஒளி பரப்பை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வி யாண்டுக்கான விலையில்லா பாடப் புத்தகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.292 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பயிலும் 69 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
இந்நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு,சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, பள்ளிக்கல்வி முதன் மைச் செயலர் காகர்லா உஷா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
நிகழ்ச்சியின் இறுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாண வர்களுக்கு பேனா மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களு டன் கலந்துரையாடினார்.
கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பு குறித்த காலஅட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும், அரசுப்பள்ளிகளில் மாணவர் களுக்கு நாளை (ஜூன் 21) முதல் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலையில் காத்திருக்க வேண்டாம், கோரிக்கை மனுக்களை தலைமைச் செயலகத்தில் அளிக்க வேண்டும்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (19.6.2021) கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிமுடிந்தபின் தனது காரில் தலைமைச் செயலகத்துக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது பட்டதாரிகள் சிலர் கோரிக்கை மனுக்களுடன் காந்தி மண்டபம் சாலையில் காத்திருப்பதை கவனித்தார். இதையடுத்து தனது வாகனத்தை நிறுத்தச் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலம் விசாரித்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். “இப்படி சாலை யில் காத்திருக்க வேண்டாம். கோரிக்கை மனுவை தலைமைச் செயலகத்தில் வந்து தர வேண்டும்’’எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அடுத்த சில நிமிடங்களில் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த பட்டதாரிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சந்தித்தார். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த உடனடி நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து கோரிக்கை மனு அளித்த பட்டதாரி அருள் செல்வி கூறும்போது, “2018-_ 2019ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் முது நிலை பட்டதாரி ஆசிரியருக்கான போட்டித் தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பையும் முடித்திருந்தோம். அதில் ஒரு பிரிவினர் பணியில் அமர்த்தப் பட்டனர். 2ஆம் பட்டியலில் இருந்த சுமார் 1,500 பேர் தற் போது காத்திருப்போர் பட் டியலில் உள்ளனர். கரோனா பரவல், சட்டப் பேரவை தேர் தல் உள்ளிட்ட பல்வேறு கார ணங்களால் பணி வழங்கப்படா மல் இருக்கிறது. எனவே, எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். முதலமைச்சர் எங்களை கவ னித்து மனுக்களை பெற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

No comments:
Post a Comment