தமிழ்நாட்டில் 100 சதவீதம் 'நீட்' தேர்வு இருக்காது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 27, 2021

தமிழ்நாட்டில் 100 சதவீதம் 'நீட்' தேர்வு இருக்காது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை, ஜூன் 27 மாணவர்கள் உணர்ந்தது போல் தமிழ்நாட்டில் 100 சதவீதம் 'நீட்' தேர்வு இருக்காது என அமைச் சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (26.6.2021) செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய (நேற்று) கரோனா பாதிப்பு 5,415 ஆக உள்ளது. தொற்று குறைந்தாலும் பரிசோ தனையின் எண்ணிக் கையை குறைக்கமாட் டோம். மேற்கு மாவட்டங் களில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மருத்து வர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. மகப்பேறு மய்யங்களில் யோகா மற் றும் மூச்சுபயிற்சி அளிக்க வேண்டும் என கூட்டத் தில்  அறிவுறுத்தப்பட்டுள் ளது. இதனால் சுகப்பிரசவத் திற்கு வழிவகுக்கும். தமிழ கத்தில் ஆண்டுதோறும் 10 லட்சம் பிரசவங்கள் நடக் கிறது. இதில் 61 சதவீதம் அரசு மருத்துவமனை களில் நடைபெறுகிறது. மேலும் விரும்பிய தேதி யில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். இது தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து. அவ்வாறான சிகிச்சையை அனுமதிக்க கூடாது என மருத்துவர் களுக்கு அறிவுரை வழங் கப்பட்டது.

கடந்த கால தி.மு. ஆட்சியில் அனந்தகிருஷ் ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவு தேர்வு தடுக்கப்பட்டது. அதேபோன்று தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி .கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வு குறித்தான தாக் கத்தை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர் மானம் நிறைவேற்றப் படும்.

இந்த தீர்மானம் குடி யரசுத் தலைவர் அல்லது உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படாத வகை யில் இருக்கும். ஒரு வேளை நீட் தேர்வு நடத் தப்படும் சூழல் வந்து விட்டால் மாணவர்கள் தேர்வுக்கு முழுமையாக தயாராக வேண்டும். அரசு அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. நீட் வேண்டாம் என்பதே தி.மு..வின் நிலைப்பாடு. 100 சதவீதம் நீட் தேர்வு இருக்காது. மாணவர்கள் இதை உணர்ந்து விட்ட னர். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் இன்னும் உணர வில்லை.

3-ஆவது அலை வராமல் தடுக்க பணிகள் மேற்கொண்டுள்ளோம். ஒருவேளை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தற்போ தைய சூழலில் வெளிச் சந்தையில் அரசு தடுப்பூசி கொள்முதல் செய்வதற் கான வாய்ப்பு இல்லை. ஜூலை மாத தொகுப்பில் தமிழ்நாட்டுக்கு 71 லட்சம் தடுப்பூசிகளாக ஒன்றிய அரசு உயர்த்தி தர உள் ளது. கரோனாவில் இருந்து மீண்டவர்களுக் கான பிந்தைய சிகிச்சை வழங்க மருத்துவமனையை விரைவில் முதல்-அமைச் சர் தொடங்கி வைப்பார். மேலும் கருப்பு பூஞ்சைக் காக தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது. மாவட்ட மருத்துவமனை களில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment