பத்மசேஷாத்ரி பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜகோபாலன் குண்டர் சட்டத்தில் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 27, 2021

பத்மசேஷாத்ரி பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜகோபாலன் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை,ஜூன் 27- சென்னை  கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன் (வயது 59). இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச தகவல்கள் மற்றும் காட்சிப் பதிவுகளை அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் கடந்த மே 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராஜகோபாலனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதேபோல திராவிட இயக்கத் தலை வர்கள்குறித்து இழிவான கருத்துகளை சமூக வலை தளங்களில் பதிவுசெய்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கிஷோர் கே.சாமியையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment