கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம், 14 வகை மளிகைப் பொருள்கள் விநியோகமும் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 4, 2021

கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம், 14 வகை மளிகைப் பொருள்கள் விநியோகமும் தொடக்கம்

 6 புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்அமைச்சர் மு.. ஸ்டாலின்

சென்னை, ஜூன் 4- முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் நேற்று (3.6.2021) தலைமைச் செயலகத்தில், 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், 14 அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணை நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பினை வழங்கினார்.

அறிவிப்புகளை நிறைவேற்றிக் காட் டினார் முதல்வர் மு..ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தல்-2021 தேர்தல் அறிக்கையில், கரோனா தொற்றால் செயல்படுத்தப் பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வா தாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்க ளின் துன்பங்களைப் போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் முதல் ரூ.4000/- வழங்கப்படும் என முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்திருந்தார்கள். அதனடிப் படையில் கரோனா நோய் தொற்றின் காரணமாக பொது மக்க ளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4196.38 கோடி செலவில், மே மாதத்தில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகைக்கான முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட் டத்தை 10.5.2021 அன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு..ஸ்டா லின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது, ஜூன் மாதத்தில் ரூ.4196.38 கோடி செலவில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு கரோனா நிவாரணத் தொகைக் கான இரண்டாவது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல மைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார். கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக் கப்பட்டுள்ள பொதுமக்களின் சிர மத்தை குறைக்கும் வகையில், மளி கைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் 28.5.2021 அன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.844.51 கோடி செலவில், 1 கிலோ கோதுமை மாவு, 1 கிலோஉப்பு, 1 கிலோ ரவை, அரை கிலோ சர்க்கரை, 500 கிராம் உளுத்தம் பருப்பு, 250 கிராம் புளி, 250 கிராம் கடலைபருப்பு, 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் மஞ்சள்தூள், 100 கிராம் மிளகாய்தூள், 200 கிராம் டீ தூள், குளியல்சோப்புமற்றும் துணிசோப்பு அடங்கிய 14 அத்தியா வசிய பொருள்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் . பெரிய சாமி, உணவுமற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கர பாணி, தலைமைச் செயலாளர் முனை வர் வெ.இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் முனைவர் ஆர். ஆனந்தகுமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், உள் ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

6 புதிய திட்டங்கள்

சென்னை கிண்டியில் ரூ.250 கோடி யில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, மதுரையில் நூலகம், எழுத்தாளர்களுக்கு இலக்கியமாமணி விருது, திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 6 புதிய திட்டங் களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் 5 முறை முதல்வராக ஆட்சியில் அமர்ந்து நல்லாட்சி நடத் திய மறைந்த முன்னாள் முதல்வர் கலை ஞர், மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மருத்துவத் துறையில் தீட்டி செயல்படுத்தியுள்ளார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் 500 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

புத்தகங்கள் மீதும், வாசிப்பின் மீதும் கலைஞருக்கு வாழ்நாள் முழுவதும் தீராப் பற்று இருந்தது. இதன் வெளிப் பாடாக கடந்த 2010இல் சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவின் அதி நவீன மிகப்பெரிய நூலகமாக போற்றப் படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். மாணவர்கள், கல்வி யாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக் கியவாதிகள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் என அனைத்து பிரிவினருக் கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக அந்த நூலகம் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழும் மக்களும் இத்தகைய வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கில், மது ரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் நவீன வசதிகளுடன் ரூ.70 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும்.

இலக்கியமாமணி' விருது

இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப் பிக்கும் வகையில், ‘இலக்கியமாமணிவிருது உருவாக்கப்படும். தமிழ் இலக் கியத்துக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர் கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம், ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலக ளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகை யில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசு மூலம் வீடு வழங்கப்படும்.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட் டூர், நீடாமங்கலம், நன்னிலம், குட வாசல், கொரடாச்சேரி, வலங்கைமான் வட் டாரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் காலியாக உள்ள இடங்கள், மாவட்ட ஆட்சிய ரால் இனம்கண்டு ஒதுக்கீடு செய்யப் படும் இடங்களில் ரூ.24 கோடியே 30 லட்சம் மதிப்பில் 16 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும். அறுவடைக் குப் பின் தானியம் மற்றும் பயறு வகை களை சரியான முறையில் உலர வைக் காததால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க, விவசாயிகள் நலன் கருதி திருவாரூரில் ரூ.5 கோடி மதிப்பில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் உலர்விக்கும் 50 களங்கள், கோட்டூர், வலங்கைமான் வட்டாரங் களில் ரூ.60 லட்சம் மதிப்பில் 2 மறு சுழற்சி தொகுப்பு உலர்விப்பான்கள், நீடாமங்கலம், மன் னார்குடி வட்டா ரங்களில் ரூ.60 லட்சம் மதிப்பில் 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்கள் என ரூ.6 கோடியே 20 லட்சம் மதிப்பில் 54 உலர்களம், உலர்விப்பான்கள் ஏற்படுத் தப்படும். மகளிர் நலன் கருதி இந்த அரசு பொறுப்பேற்ற அன்றே மகளி ருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இல வச பயணச் சலுகையை முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மாற்றுத் திறனாளி கள், திருநங்கைகளுக்கும் நகர்ப்புற அரசுப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும். தமிழகத்தில் இது வரை 11,449 திருநங்கைகள் (மூன்றாம் பாலித்தவர்) கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 6,248 பேருக்கு நலவாரியம் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர் களுக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இவர்கள் நலவாரித்தால் வழங்கப் படும் அடையாள அட்டை யுடன் சாதாரண கட்டண நகரப் பேருந் துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம். அத்துடன், குடும்ப அட்டை இல்லாமல் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள திரு நங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

கோயில் பணியாளர்கள்

இதுதவிர, அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் உள்ள கோயில்களில் நிலையான மாதச் சம்பளம் இன்றிப் பணியாற்றி வரும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பட்டாச்சாரி யார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணி யாளர்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருள்கள் வழங் கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர், அதன் அடையாளமாக 12 பேருக்கு அவற்றை வழங்கினார்.

நிவாரணத் தொகை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 3 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், 2 மருத்துவர்கள், ஒரு காவல் ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர், ஒரு நீதிபதி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் முதல்வர் வழங்கினார்.

காவல்துறையினருக்கு ஊக்கம்

தமிழகத்தில் கரோனா தொற்றின் முதல் மற்றும் 2ஆம் அலை பாதிப்பின் போது, காவல்துறை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத் தாமல் கடமையாற்றி வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 2ஆம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment