மறைந்த மாதவி அவர்களுக்கு கழகத் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 4, 2021

மறைந்த மாதவி அவர்களுக்கு கழகத் தலைவர் இரங்கல்

புனே நகரில் நீண்ட காலம் வாழ்ந்தவரும், அமெரிக்காவில் உள்ள பேராசிரியர் அரசு செல்லையா அவர்களது உறவினருமாகிய, தஞ்சை கண்ணுகுடி தண்டபாணி அவர்கள் குடும்பத்தில் ஒருவருமான திருமதி மாதவி கரோனா கொடுந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மறைவுற்றார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.

3.6.2021 அன்று அவர் மறைந்தார் என்ற நிலையில் அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி

தலைவர்,            

திராவிடர் கழகம்

4.6.2021 

குறிப்பு: தஞ்சையில் கண்ணுகுடி தோழர் தண்டாயுத பாணி மறைவுக்கு அவர் இல்லம் சென்று நாம் ஆறுதல் கூறியபோது மாதவி நம்மிடம் உரையாடியது நீங்காத நினைவாக உள்ளது

No comments:

Post a Comment