கரோனா 2ஆவது அலை முடிந்துவிட்டதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 22, 2021

கரோனா 2ஆவது அலை முடிந்துவிட்டதா?

நிபுணர்கள் பதில்

புதுடில்லி, ஜூன் 22 நாட்டில் தொடர்ந்து 14-ஆவது நாளாக கரோனா பாதிப்பு விகிதம் 5 சதவிகி தத்துக்கு கீழ் பதிவானாலும், 2-ஆவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக உறுதிபடக் கூறமுடியாது என்று நிபு ணர்கள் தெரிவிக்கின்றனர்.

கரோனாவை பொறுத்த வரை ஒரு முக்கியமான மைல்கல்லை இந்தியா நேற்று (21.6.2021)கடந்தது. அதாவது, தொடர்ந்து 14-ஆவது நாளாக நாட்டில் கரோனா பாசிட்டிவ் விகி தம் 5 சதவிகிதத்துக்கு கீழ் இருந்தது.

ஒரு பகுதியில் ஊர டங்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள தேவையை இது பூர்த்தி செய்வதாக உள்ளது. மேலும் 88 நாள்களில் மிக வும் குறைவாக தொற்று எண்ணிக்கை 53 ஆயிரத்து 256 ஆக சரிந்துள்ளது. கரோனா பாசிட்டிவ் விகி தமும் 3.83 சதவீதமாக குறைந் துள்ளது.

இதெல்லாம், கரோனா 2-ஆவது அலை முடிவுக்கு வந்துவிட்டது, மேலும் பல தளர்வுகளை அறிவிக்க லாமே என்ற எண்ணத்தை பலருக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவ்வளவு சீக்கிரம் சந்தோஷப்பட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அவசரப்படக் கூடாது, பொறுமையான கவனம் அவசியம் என்று எச்சரிக் கிறார்கள், நிபுணர்கள்.

டில்லி சிவநாடார் பல்கலைக்கழக இயற்கை அறிவியல் துறை இணை பேராசிரியர் நாகா சுரேஷ் வீரப்பு, கரோனா பாசிட்டிவ் விகிதம் 5 சதவிகிதத்துக்கு குறைந்துள்ள விதத்தில், 2-ஆவது அலை உச்சத்தைத் தொட்ட அதேவேகத்தில் மறைந்துவருகிறது. ஆனால் அது இன்னும் முடிவை எட்டவில்லை. அதிகம் பரவக்கூடிய புதிய கரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ் போன் றவை தோன்றியிருக்கின்றன என்கிறார்.

அவர் மேலும் கூறுகை யில், கடந்த பிப்ரவரியில், கரோனா முதலாவது அலை முடிந்ததைக் கொண்டாடிய நாடு, 2-ஆவது அலை வருவதைக் கவனிக்கத் தவறிவிட்டது என்றார்.

புதிதாக தொற்றுக்கு உள்ளாவோரின் எண் ணிக்கை குறைவாக இருந்தா லும், பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண் ணிக்கை இன்னும் அதிக மாகத்தான் இருக்கிறது என்று பொதுக்கொள்கை நிபுணர் சந்திரகாந்த் லகா ரியா கூறுகிறார்.

அவர் கூறுவதை ஆமோதிக்கும் விஞ்ஞானி கவுதம் மேனன், கேரளா போன்ற மாநிலங்களில் இன்னும் பாசிட்டிவ் விகிதம் 5 சதவிகிதத்துக்கு அதிக மாகத்தான் இருக்கிறது. என்கிறார்.

இப்போதைக்கு, அச்சத் துடன் எதிர்நோக்கப்படும் கரோனா 3-ஆவது அலையை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்று பேரா சிரியர் சுரேஷ் வீரப்பு கூறுகிறார்.

No comments:

Post a Comment