கரோனா நன்கொடை
அய்யா,
நாங்கள்
பணிபுரியும் (அ.வி.போ.கழகம்) பணிமனை களில் தி.மு.க.
- கம்யூனிஸ்ட்
தொழிற்சங்கங்கள் கரோனா நன்கொடை வசூலித்து வருகிறார்கள். அவர் களுக்கும், நமது இயக்கத்திற்கும் தொ.மு.ச.
- ரூ.3000, சி.அய்.டி.யூ.- ரூ.3000, தி.க. - ரூ.3000
நன்கொடை தந்திருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
- மா.
இராசு, கூடுவாஞ்சேரி.
தமிழ்நாடு
முதல்வருக்கு
எண்ணிலாப்
பாராட்டு
மரியாதைக்குரிய
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
அறிவாசான்
தந்தை பெரியார் அவர்கள் 1970ஆம் ஆண்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என கருவறை நுழைவுப்
போராட்டம் நடத்தினார். மேனாள் முதல்வர் கலைஞர் அவர்கள் சட்டம் நிறைவேற்றி சட்டவடிவும் கண்டார். திராவிடம் வெல்லும் என்ற "இனப் போர்" முழக்கத்தால் வென்று தமிழ்நாடு அரசின் முதல்வர் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின்
40 நாள்களில் சொன்னதை மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து, 10 ஆண்டாய் பள்ளத்தில் கிடந்த தமிழ்நாட்டை தலைமிளிரச் செய்து வருகின்றார். இந்நிலையில் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு
அவர்கள் 100 நாள்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கிட முனைவேன் என்று செயல்பட முனைந்துள்ளார். வெற்றிகாண்பார் என்பது உறுதி! தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அமைக்கப்பட்ட இராஜபாட்டையில் இன்னும் சமூகநீதி போன்ற இலட்சியத்தை வென்று நிலைநாட்டிட தமிழ்நாடு முதல்வரை எண்ணிலாப் பாராட்டுகளால் பாராட்டி மகிழ்கின்றோம்.
- இரா.
முல்லைக்கோ
பெங்களூரு
No comments:
Post a Comment