புதிய கல்விக் கொள்கையை எவ்வகையிலும் அனுமதிக்காதீர்
பகுத்தறிவு ஆசிரியரணி மாநில கலந்துரையாடல் கூட்டத் தீர்மானம்!
பகுத்தறிவு
ஆசிரியரணி மாநில கலந்துரையாடல் கூட்டம் 19.6.2021 காலை 10.30 மணி அளவில் காணொலி வழியாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு
பகுத்தறிவு ஆசிரிய ரணி மாநில அமைப்பாளர் வா.தமிழ்ப் பிரபாகரன்
வரவேற்புரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி தலைமையேற்று
பகுத் தறிவு ஆசிரியரணி எப்படிச் செயல்பட வேண்டும் என்று தலைமையுரையாற் றினார்.
திராவிட
மாணவர் கழக மாநில செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு
பெரியார் தொடக்கவுரையில், இக்காலகட்டத்தில் பகுத்தறிவு ஆசிரியரணி செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் எனக் கருத்து ரையாற்றினார். திராவிடர் கழகப் பொரு ளாளர் வீ.குமரேசன் அவர்கள்
சிறப்புரை ரையில் பகுத்தறிவு ஆசிரியரணி யின் அரசின் திட்டங்களோடும், மாணவர் களோடும் நேரடியான தொடர்பில் இருப்பவர்கள், அவர்கள் வழிகாட்டியாக முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.
தீவிரமாக
பகுத்தறிவு கருத்துகளைக் கொண்டு செல்ல வேண்டும். நாம் தொழிற் சங்கம் போல் இல்லாது வழி நடத்தக்கூடிய இயக்கமாக இருக்க வேண்டும். அரசுக்கு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அதை சரிபடுத்துபவர்களாக மிகவும் கவன முடன் பணியாற்ற வேண்டும் என்று தொடக்கத்திலும், அனைத்துப் பொறுப்பா ளர்களும் பேசிய பின்பு இறுதியில் நிறை வுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில்
விருதுநகர் மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் முத் துக் கிருஷ்ணன், புதுச்சேரி மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் இயேசு ராஜா, தாம்பரம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சிவக்குமார், செய்யாறு மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலை வர் ஆசிரியர் வெங்கட்ராமன், மன்னார் குடி மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் இரா.கோபால், மாவட்ட அமைப்பாளர் நா.ரவிச்சந்திரன், கும்ப
கோணம் மாவட்ட ப.க. தலைவர்
வி. மோகன், திருச்சி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் விஜயகுமார், நாகை மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் தங்கையன், தஞ்சாவூர் மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சங்கர், மதுரை மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சரவணன், கள்ளக்குறிச்சி மாவட்டப் ப.க. தலைவர்
எழிலரசன், லால்குடி மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சண்மும், கரூர் மாவட்ப பகுத்தறிவு ஆசி ரியரணி அமைப்பாளர் முத்துக் கிருஷ் ணன், கோபி மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் குப்புசாமி, தருமபுரி மாவட்டப் ப.க. தலைவர்
கதிர் செந்தில், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட் டத் தலைவர் இரா.கிருஷ்ண மூர்த்தி,
கள்ளக்குறிச்சி
ப.க. மாவட்டச் செயலா
ளர் முருகன், ஆத்தூர் மாவட்டப் பகுத்த றிவு ஆசிரியரணி தலைவர் க.பெரியசாமி, ஆசிரியரணி
மாவட்டச் செயலாளர் சா.வினோத்குமார், ஆசிரியரணி
மாவட்ட அமைப்பாளர் மாயக்கண்ணன், ஆத்தூர் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப் பாளர் பழனிவேல், மேட்டூர் மாவட்டப் ப.க. தலைவர்
மதியழகன், மேட்டூர் மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்டப் ப.க. செயலாளர்
அன்புமதி, தருமபுரி மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் அண்ணாதுரை, ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளர் மா.கருணாநிதி ஆகியோர்
கருத்துரை ஆற்றினர்.
தொடர்ந்து
பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர்கள் அண்ணா.சரவணன், அ.தா.சண்முகசுந்தரம்,
கோபு.பழனிவேல், இரா.ரஞ்சித்குமார் ஆகி யோர் கருத்துரை ஆற்றினர். திருவள்ளூர் மாவட்டப் பேராசிரியர் சி.நா.வீரமணி,
திருப்பத்தூர் திருப்பதி, விஜயலெட்சுமி, தஞ்சாவூர் ப.க. தோழர்
இலக்குமணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
ப.க. செயலாளர் நட
ராஜன், திருத்துறைப்பூண்டி ஆசிரியரணி தோழர் கலிதீர்த்தான், கிருஷ்ணகிரி வசந்தராஜா, தாராபுரம் கலையரசன் ஆகி யோர் கருத்துரை ஆற்றினர். பகுத்தறிவு ஆசிரியரணி (பேராசிரியர்) மாநில அமைப் பாளர் பேராசிரியர் எஸ்.அருள்செல்வன் நன்றி கூறினார். பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் கி.இரமேஷ் ஒருங்கிணைத்துப்
பேசினார்.
கூட்டத்தில்
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்
1:
சமூக
நீதிக்கு எதிரான 'நீட்' நுழைவுத் தேர்வை ரத்து செய்திட ஏ.கே.ராஜன்
தலைமையில் குழு அமைத்திட்ட தமிழ் நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரி விப்பதோடு, ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை தடுக்கும் நீட் நுழைவுத் தேர்வினை இந்த ஆண்டே ரத்து செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
தீர்மானம்
2:
நீட்
தேர்வின் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஏ.கே.ராஜன்
குழுவிற்கு அனைத்து ஆசிரியரணி தோழர்களும் விரிவாக எழுதி மின்னஞ்சல் மூலமாக விரைவாக அனுப்புவது எனத் தீர்மானிக் கப்படுகிறது.
தீர்மானம்
3:
தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் அடிப்படைக் கல்வியையும், உயர் கல்வி யையும் தடுத்து நிறுத்துவதோடு, அவர் களைக் குலக்கல்வியை நோக்கி அழைத் துச் செல்லும் ஆபத்தான புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று தெளிவாக அறிவித்துள்ள தமிழ் நாடு அரசினை பாராட்டி நன்றி தெரிவிக் கின்றோம். மேலும் எந்த நிலையிலும் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் நுழைந்திடாமல் தடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசினை கேட்டுக் கொள்கிறோம்.
தீர்மானம்
4:
பள்ளி,
கல்லூரி பாடப்புத்தகங்களில் புகுத்தப்பட்டுள்ள திராவிடர் இயக்கத் திற்கு எதிரான கருத்துக்களையும், ஹிந் துத்துவா ஆதரவு கருத்துகளையும், கண் டறிந்து அதனை நீக்குவதுடன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ றிஞர் கலைஞர் வாழ்க்கை வரலாற்றுப் பாடங்களையும், திராவிடர் இயக்க வரலாற்றுச் செய்திகளையும் அனைத்து நிலை வகுப்பிலும் பாடமாக வைத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசினை
கேட்டுக் கொள்கின்றோம்.
தீர்மானம்
5:
வரும்
செப். 17 தந்தை பெரியார் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் பெரியார் 1000 வினா விடைப் போட்டி யினை பகுத்தறிவு ஆசிரியரணி முன் னின்று நடத்துவது எனத் தீர்மானிக்கப் படுகிறது.
தீர்மானம்
6:
பகுத்தறிவு
ஆசிரியரணி சார்பாக மண்டல வாரியாக கலந்துரையாடல் கூட் டங்களை நடத்தி மண்டலப் பொறுப்பா ளர்களை நியமித்து ஆசிரியரணிக்கு உறுப்பினர்களை அதிகமாகச் சேர்ப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment