ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 27, 2021

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூன் 27 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விளையாட்டு வீரர்களுக்கான கரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாமை முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (26.6.2021) தொடங்கி வைத்தார்.

இதையடுத்து ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கி முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேசியதாவது:-

வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று சொல்வார்கள். அரசியலை விளையாட்டாக நினைப்பவர்களும் நம் நாட்டிலே இருக்கிறார்கள். ஆனால், விளையாட்டு துறையை விளையாட்டாக நினைத்துவிடக்கூடாது. அதை விளையாட்டாக நினைத்தால் விளையாட்டாக போய்விடும். ஆகவே அரசு இன்றைக்கு இந்த விளையாட்டு துறையை மேன்மைமிக்க துறையாக உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறது. விளையாடுபவர்களை விளையாட்டுக்காரர்கள் என்று சொல்வதில்லை, அவர்களை விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள் என்றுதான் சொல்கிறோம். இந்த வீரர்களால்-வீராங்கனைகளால் நாட்டுக்கு பெருமை. நாளைய தலைமுறைக்கு ஒரு வலிமை.

ஒலிம்பிக் அகாடமி உள்ளிட்ட முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலமாக இந்திய அளவிலான தரவரிசையில் தமிழ்நாட்டையும், பன்னாட்டு அளவிலான தரவரிசையில் இந்தியாவையும் நாம் முன்னேற்ற முடியும்.

இந்த திசையில் நாம் தொடர்ந்து பயணித்தால் ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஒரு நாள் பின்னுக்கு தள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை நிச்சயம் ஏற்படும். உலக அரங்கில் விளையாட இருக்கக்கூடிய நமது விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தவேண்டிய கடமை நம் அரசுக்கு இருக்கிறது.

எனவே, தங்கப்பதக்கம் வெல்லக்கூடிய தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பரிசுத் தொகை

அறிவிப்பை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், .பரந்தாமன், டாக்டர் என்.எழிலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் ஆதவ் அர்ஜூன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment