சென்னை,
ஜூன் 22 ஊரடங்கு கால கூடுதல் தளர்வு காரணமாக, சென்னையில் ஒரு மாதத்துக்கு பிறகு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. 50 சதவிகித பயணிகளுடன் மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டன.
தமிழ்நாட்டில்
கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல் படுத்தப்பட்டிருந்த ஊர டங்கை வருகிற
28-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உத்தரவிட் டார். அதோடு மாவட்டங்களை 3 வகையாக பிரித்து கூடுதல் தளர்வுகளையும் அறிவித்தார். அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல் பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து
நேற்று (21.6.2021) முதல் தொடங்கப்பட்டது.
சென்னையில்
கடந்த மாதம் (மே) 10-ஆம் தேதி முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 8, 9-ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.
மாநகர
பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்டபிறகு பேருந்து போக்கு வரத்து முடங்கிப்போ னது. அந்தவகையில் கடந்த
10-ஆம்
தேதி முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப் படாமலேயே இருந்து வந்தது.
50 சதவிகித
பயணிகளுடன்...
இந்தநிலையில்
42 நாள் களுக்கு பிறகு சென்னையில் நேற்று (21.6.2021) மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்னதாக பணிமனைகளில் இருந்து கிருமிநாசினி தெளிக் கப்பட்ட பின்னரே இயக்கப்
பட்டன. 50 சதவிகித பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
சில பேருந்துகளில் பயணிகள் நெருக்கமாக உட்கார்ந்திருப் பதையும் பார்க்கமுடிந்தது.
பயணிகளின்
கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட் டது. முகக் கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே அனுமதிக் கப்பட்டனர். அதேவேளை பெண்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப் பட்டது.
அதேபோல
மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக் கும் இலவசமாக
பயணிக்க அனுமதிக்கப்பட்டது. இத னால் அவர்கள்
மகிழ்ச்சியுடன் பயணத்தை முன்னெடுத்தனர். அதேவேளை 'இ'-பதிவு பெறா
மல் பலரும் பேருந்துகளில் பயணித்து நினைத்த இடங் களுக்கும் சென்று வந்தனர்.
சென்னை
போலவே புறநகர் பகுதிகள் மற்றும் திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்டங்களிலும் நேற்று பேருந்து போக்குவரத்து நடைமுறைக்கு வந்தது. அதேவேளை மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு இடையே யும் பேருந்து சேவை நடந்தது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ
ரயில் சேவை
அதேபோல
மெட்ரோ ரயில் சேவையும் நேற்று (21.6.2021) தொடங்கியது.
அதன்படி நேற்று காலை 6.30 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டது. காலை 9 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை யிலும் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக் கப்பட்டன. மற்ற நேரங்களில் 10 நிமிடம் முதல் 15 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.
முன்னதாக
மெட்ரோ ரயில் நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு உடல் வெப்ப பரிசோதனை நடத்தியும், கைகளில் சானி டைசர் தெளிக் கப்பட்ட பின்னரேயும் பய ணிகள் அனுமதிக்
கப்பட்டனர். அதேபோல முகக் கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனும திக்கப்பட்டனர். ரயில் நிலை யங்களில் ஏ.சி. வசதி
நிறுத்தப் பட்டிருந்தது. அதேவேளை ரயில்களில் மட்டுமே ஏ.சி. வசதி
செயல்படுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக 50 சதவீத பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப் பட்டனர். நின்றுகொண்டு யாரும் பயணிக்கக்கூடாது என தொடர்ந்து ஒலி
பெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப் பட்டுக் கொண்டே இருந்தது.

No comments:
Post a Comment