முதல்-அமைச்சருக்கு ஆலோசனை வழங்க 5 பேர் கொண்ட நிபுணர் குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 22, 2021

முதல்-அமைச்சருக்கு ஆலோசனை வழங்க 5 பேர் கொண்ட நிபுணர் குழு

சென்னை, ஜூன் 22  தமிழக சட்டமன்றத்தின்  16 வது கூட்டத்தொடர் நேற்று (21.6.2021) காலை தொடங்கியது. கரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் சட்டமன்றம் நடக்கிறது. முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சபைக்கு முன்னரே முதல்-அமைச்சர்  உள்ளிட்ட அனைத்து உறுப்பினர் களும் வந்துவிட, பின்னர் சபைக்கு வந்த ஆளுநரை பேரவைத் தலைவர்  அப்பாவு வரவேற்று சபைக்குள் அழைத்து வந்தார்.

பின்னர் ஆளுநர் உரையை வாசித்தார். அதில் பல்வேறு சிறப்பம்சங்கள், அரசின் கொள்கை குறிப் புகள், எதிர்கால திட்டங்கள் இருந்தாலும் முக்கியமான பல அம்சங்கள் இருந்தன.

அதில் முக்கிய அம்சமாக தமிழகத்தின் பொருளா தாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கு  ஆலோ சனை  வழங்க  முதல்-அமைச்சருக்கான  பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் உரையில் கூறி இருப்பதாவது:-

வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன் படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற் படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்-அமைச்சருக்கு  ஆலோசனை கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,

2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ,

3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொரு ளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்,

4. ராஞ்சி பல்கலைக்கழக டில்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,

5. ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய 5 பேர் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பர்.

இவர்கள் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கு  ஆலோசனைகளை அளிப்பார்கள்.

 

No comments:

Post a Comment