அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை,
ஜூன் 22 தமிழ்நாட்டுக்கு கூடுத லாக 4 லட்சம் தடுப்பூசி களை ஒன்றிய அரசு வழங்க இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார்.
பருவமழைக்கு
முன் பாக கழிவுநீர் கட்டமைப் புகளை முழுமையாக தூர் வாருதல் மற்றும் பரா மரிப்பு பணிகள் மேற் கொள்ளுதல் ஆகிய பணி களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன்
நேற்று (21.6.2021) துவக்கி வைத்தார்.
பின்னர்
செய்தியாளர் கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணி யன்,
‘வடகிழக்கு பருவ மழைக்கு முன்னால் பாதாள சாக்கடை பிர தான குழாய் அடைப்பு களை தூர்வாருதல்
போன்ற பணிகள் ஆண்டு தோறும் செய்வது வாடிக்கை, ஆனால் கடந்த
காலங்களில் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால் 434 வாகனங்கள் மூலம் சென் னையில் 4200 கிலோ நீளம் உள்ள பாதாளசாக் கடை தூர்வாரும் பணி மற்றும்
மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது. 30ஆம் தேதி வரை இப் பணி நடைபெறும். இந்த பணிகள் மூலம் மழைக் காலங்களில் மக்களுக்கு ஏற்படும் இடையூறு தவிர்க்கப்படும்.
கரோனா
தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் முகக்கவசம் அணி வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற 4 தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் 3-ஆவது அலை நம்மை பாதிக்காது. தடுப்பூசி போடும் பணி மிக விரிவு படுத்தப்பட்டுள்ளது, நிச்சயம் நமக்கு தேவை யான தடுப்பூசிகள், வரும் 18 முதல் 44 வயதுடை யவர்களுக் கான 14 லட்சம் தடுப்பூசிகள்
இம்மாத இறுதிக்குள்
வர உள்ளது.
தமிழ்நாட்டில்
தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெறு வதால் கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு தொகுப்பில் இருந்து தர உள்ளனர். மேலும்
ஒன்றிய அரசு அடுத்த மாதம் தமிழ்நாட் டிற்கு 71 லட்சம்
தடுப் பூசிகளை தர இருக்கின் றனர்.
மேலும் செங்கல் பட்டு மற்றும் குன்னூர் தடுப்பூசி தயாரிப்பு நிறுவ னங்களில் கரோனா தடுப் பூசி தயாரிக்க ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment