சட்டமன்றத்தில் இன்று தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடமை சட்டமுன்வடிவு அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 22, 2021

சட்டமன்றத்தில் இன்று தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடமை சட்டமுன்வடிவு அறிமுகம்

முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், திரைக்கலைஞர் விவேக்,

எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன்,

 மறைவுற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்

சென்னை,ஜூன்22- சட்டமன்றத் தில் இன்று (22.6.2021) அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன், திரைக்கலைஞர் விவேக், எழுத் தாளர் கி.ராஜநாராயணன், கி.துளசி அய்யா வாண்டையார், டி.எம்.காளியண்ணன் மற்றும் மறைவுற்ற சட்டமன்ற உறுப்பி னர்கள் 13பேருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இன்று (22.6.2021) காலை சட்டப்பேரவை கூடியதும் பேர வைத் தலைவர் மு.அப்பாவு எழுந்து மறைவுற்ற சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மு.பாண்டுரங்கன், .முகமத் ஜான், .பாப்பா சுந்தரம், முனைவர் செ.அரங்கநாயகம், தி.பெ.விஜயன், வி.எஸ்.இராஜ், கி.ரா.ராஜேந்திரன், .சகாதேவன், எல்.சுலோச்சனா, கே.பி.ராஜூ, கி.இராமச்சந்திரன், எம்.அன்பழகன், ஜெ.பன்னீர் செல்வம் ஆகியோர் மறைவுக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.

பிரபல திரைக் கலைஞர் மற்றும் சமூக ஆர்வலர் விவேக் அவர்களின் மறைவுக்கும், பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் மறைவுக்கும், சுதந்திர போராட்ட வீரர் கி.துளசி அய்யா வாண் டையார் அவர்களின் மறைவுக்கும், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் மற்றும் முதல் மூன்று சட்டப்பேரவைகளின் உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் மறைவுக் கும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்த கிருஷ்ணன் மறைவுக்கும் இப்பேரவை இரங்கலையும் அவர் தம் குடும்பத்தினருக்கு ஆறுதலை யும்  தெரிவித்துக்கொள்கிறது என பேரவைத் தலைவர் தெரிவித்தார். இதனையடுத்து அனைத்து உறுப் பினர்களும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு நிதிநிலை

நிர்வாகத் தில் பொறுப்புடமை சட்டமுன் வடிவு அறிமுகம்

சட்டமன்றத்தில் இன்று (22.6.2021) நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடமை திருத்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்து வைத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

15ஆம் நிதிக்குழுவானது தனது 2021-_2026க்கான அறிக்கையில் எரிசக்தித்துறை குறித்த சில செயல் திறன் அளவுகோலின் அடிப்படை யில் 2021-_2022 முதல் 2024_2025 வரையிலான கால அளவினை உள்ளடக்கிய பரிந்துரை காலத்தில் முதல் நான்காண்டுகளில் மாநி லங்கள், ஆண்டொன்றுக்கு மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 0.05விழுக்காடு அளவு கூடுதல் கடன் பெறுவதற்கான வழிவகைகளை பரிந்துரைத்துள்ளது. மேலும், நிதிக்குழுவானது மொத்த மாநில உற்பத்தி மதிப்பீட்டிற்கு நிகர கடன் பெறுதலுக்கான வரம்பினை 2021_-2022, 2022-_2023 மற்றும் 2023_-2024 முதல் 2025-_2026 ஆண்டுகளில் முறையே 4 விழுக் காடு, 3.5 விழுக்காடு மற்றும் 3 விழுக்காட்டுக்காக பரிந்துரைத் துள்ளது. இந்த சட்ட முன்வடிவா னது மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 21ஆம் நாளன்று சட்டப்பேரவைக்கு ஆளுநர் உக வந்தளித்த பேருரைக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பி னர்கள் பெரிதும் நன்றியுடைய வர்கள் ஆவார்கள் என ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான உரையை தொடங்குவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். தமிழ்நாடு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து சின்னசேலம் சட்டமன்ற திமுக உறுப்பினர் தா.உதயசூரியன் அவர்கள் விவாதத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

No comments:

Post a Comment