பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கவும் இணைய கல்விக்கும் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 22, 2021

பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கவும் இணைய கல்விக்கும் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை, ஜூன் 22- பள்ளி மாணவ-மாணவிகளை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது மற்றும் இணைய வகுப்பு நடத்துவதற்கான  வழிகாட்டு நெறிமுறைகளைபள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* அனைத்து கல்வி வாரியங்களை சேர்ந்த பள்ளிகளுக்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்.

*  ஒவ்வொரு பள்ளியிலும்,  மாணவர் பாதுகாப்பு ஆலோச னைக் குழுஅமைக்கப்படும். இந்த குழுவில் பள்ளியில்  தலைமை ஆசிரியர், ஆசிரியர் இருவர், பெற்றோர் ஆசிரியர் கழக  உறுப்பினர்  இருவர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியர் அல்லாத  பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கு ஏற்ப பள்ளிசாரா வெளிநபர் ஒருவர்  உறுப்பினராக இருப்பார்கள். 

* ஒரு மாதத்தில் ஒரு  கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக் கல்வித்துறை உருவாக்கும். இதில்,  தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி  உருவாக்கப்படும்.

*  பள்ளி உறுப்பினர் அனைவருக்கும் ‘‘போக்சோ’’ சட்டத் தில் உள்ள பாலியல் ரீதியான குற்றங்கள்  குறித்த முழு புரிதல் உண்டாக்க பயிற்சி அளிக்கப்படும். 

* இணைய வழி  கற்றல்- கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும்.

* இணைய வழி  நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.

* மாணவர்கள் புகார் தெரிவிக்க பள்ளியில்  பாதுகாப்பு பெட்டிகள்  வைக்கப்படும்.

*  மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, பள்ளியில்  பெறப்பட்ட அனைத்து புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டை  பராமரிக்க வேண்டும். வாய்மொழியாக பெறப்பட்ட புகார்களையும் இந்த பதிவேட்டில்  பதிவு செய்ய வேண்டும்.

* அனைத்து பள்ளியிலும் ஒவ்வொரு வருடமும்  நவம்பர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை குழந்தைகளை துன்புறுத்தலை  தடுக்கும் வாரம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ஆணையர் தலைமையில் குழு

இணைய வழி வகுப்பு பாதுகாப்பு  குழுவின் தலைவராக பள்ளிக் கல்வி ஆணையர் இருப்பார். கல்லூரிக்  கல்வித்துறையின் இயக்குநர், கணினி குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை  அலுவலர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர் புடைய  பிரிவு காவல் துறை அலுவலர், இரு கல்வியாளர்கள், இரு உளவியல் நிபுணர்கள்,  குழந்தைகள் இடையே பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்  பணியில் இருப்போர், தன்னார்வலர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இந்த குழுவில்   இடம் பெறுவார்கள். இணைய வழி வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்த  குழுவினர் உருவாக்குவார்கள். அந்த நெறிமுறைகளை மேற்கண்ட பள்ளிக் கல்வி  ஆணையர் ஏற்று அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைப்பார்.

No comments:

Post a Comment