சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
சென்னை,
ஜூன் 22 கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்றும், சட்ட மன்றத்தில் அதிக கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும் தி.மு.க.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின்
அறிவுரை வழங்கி உள்ளார்.
தமிழகத்தில்
தி.மு.க. ஆட்சி
அமைந்த பின்னர் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலை வாணர் அரங்கத்தில் உள்ள சட்டமன்ற அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று (21.6.2021) தொடங்கியது.
இந்த கூட்டத் தொடர் வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த
நிலையில் தி.மு.க.
சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்
தலைமை தாங் கினார். துரைமுருகன், கே.என்.நேரு,
எ.வ.வேலு, பொன்முடி,
மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு
உள்பட அமைச்சர்களும், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்களும் என 124 பேர் பங்கேற்றனர்.
தி.மு.க. பொருளாளர்
டி.ஆர்.பாலு எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. உள்பட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மாலை 5.15 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.45 மணியளவில் முடிவடைந்தது.
மு.க.ஸ்டாலின் பேச்சு
கூட்டத்தில்
தி.மு.க. சட்டமன்ற
உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின்
அறிவுரை வழங்கி பேசியதாக வெளி யான தகவல் வருமாறு:-
தி.மு.க. ஆட்சி
நீடித்து நிலைத்திருக்க வேண்டும். நமக்கு வாக்கு அளிக்காத மக்களும் இவர்களுக்கு வாக்களிக்காமல் பெரிய தவறு இழைத்து விட்டோமே? என்று வருந்தும் அளவுக்கு நம்முடைய மக்கள் பணி சிறப்பாக இருக்க வேண் டும்.
அறிஞர்
அண்ணாவின் பொன் மொழியான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை தி.மு.க.
சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் பின்பற்றி மக்கள் பணியில் ஈடுபட வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் வகையில் நம்முடைய இந்த 5 ஆண்டு கால செயல்பாடுகள் அமைய வேண்டும்.
அதிக
கேள்விகளை...
சட்டசபையின்
மாண்பை காப் பாற்றும் வகையில் செயலாற்ற வேண் டும். சட்டசபை கூட்டங்கள் நடை பெறும்போது தி.மு.க.
சட்டமன்ற உறுப்பினர்கள் அதிக கேள்விகள் எழுப்ப வேண்டும். எனவே அரசு துறைகளின் தரவுகளையும், தொகுதி மக்களின் குறைகள், பிரச்சினைகள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். சட்டசபையில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகள், முன் வைக்கும் பிரச்சினைகளுக்கு மூத்த உறுப்பினர்கள் மிகவும் கவனமாகவும், சிறப்பாகவும் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு
அவர் பேசினார்.

No comments:
Post a Comment