மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி மாணவர்களின் பின்னூட்டக் கருத்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 22, 2021

மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி மாணவர்களின் பின்னூட்டக் கருத்துகள்

மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரி யாரியல் பயிற்சி மாணவர்களின் பின்னூட்டக் கருத்துகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன. அவ்விவரம் வருமாறு:

நான் 2020-2021ஆம் ஆண்டு எனது  பள்ளிப் படிப்பை முடித்துள்ளேன்.   பகுத்தறிவு பகலவன் தந்தை  வழியில் மூடநம்பிக்கை, பெண்ணடிமை, சுயமரியாதை, பெண் விடுதலை, ஜாதி மறுப்பு, சமுதாய சீர்திருத்தம் ஆகிய கொள்கைகளை இந்த இணையவழி வகுப்பின் மூலம் என்னுள் பல கேள்விகள் (புதைந்து இருந்தாலும்) தந்தை பெரியாரைப் பற்றி அறிய இந்த பயிற்சி வகுப்பு சிறப்பாக இருந்தது நன்றி. இணையவழி வகுப்பின் மூலம் மாணவர்களுக்கு திராவிட இயக்க கொள்கையை பரப்பிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் "மதம் மனி தனை மிருகமாக்கும்!!  ஜாதி மனிதனை சாக் கடையாக்கும்" இந்த பொன்மொழி தந்தை பெரியாரின் வழிகளில் இளைய சமுதாயமா கிய நாம் அனைவரும் பின்பற்றி கடைபிடித்து சமுதாயத்தை காப்போம். நன்றி. வெற்றி படைப்புகளுடன்...

-மா.சுசிமா மாதேஸ்,  தருமபுரி மாவட்டம்

அனைவருக்கும் வணக்கம்! நான் தற் போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூ ரிக்கு விண்ணப்பித்துள்ளேன். நான் தருமபுரி மண்டல பெரியாரியல் பயிற்சி  வகுப்பில் கலந்துகொண்டதில் பெரியார் மற்றும் திரா விடர் இயக்கத்தின் வரலாற்றை பற்றி அறிய வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்ததில் மகிழ்ச்சி.

-சித்தாந்தன், ஓசூர்.

அனைவருக்கும் வணக்கம், என் பெயர் நா.பிரித்திகா. திருப்பத்தூர் மாவட்டம், இந்த பதினைந்து நாள் பெரியாரியல் வகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது பெரியார் பற்றிய செய்தி மற்றும் கடவுள் இல்லை, மூடநம்பிக்கை இதை பற்றி இந்த வகுப்பின் மூலம் தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி இதனை மட்டும் இல்லாமல் பெண்ணடிமை, சுயமரியாதை பற்றி என்று சொல்லிக் கொண்டே போகலாம் இப்படி ஓர் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததன் மூலம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக நான் நன்றியை தெரிவித்து  கொள்கிறேன்.

-நா.பிரித்திகா, திருப்பத்தூர் மாவட்டம்

நான் பாலக்கோடு வட்டம் கோவிலூர் கிராமத்தை சார்ந்தவன். சிறுவயதில் இருந்தே பெரியார்  கொள்கையில் நாட்டம் அதிகம் எனினும் திராவிடர் கழகம், நீதிக்கட்சி ஆகிய வற்றை மேலோட்டமாகத்தான் தெரி யும் இந்த வகுப்பின்  மூலம் மேலும் அதிகமாக தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேலும் திராவிடத்தின் கொள்கைகளை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. இந்த வகுப்பின் மூலம் இன்னும் அதிகமாக தெரிந்து கொண்டேன் எனவே இன்னும் அதிக செய்தி களை நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள இந்த வகுப்பு உதவியாய் அமைந்துள்ளது. மாண வர்கள் அனைவருக்கும் நிறைய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி

- பிரனேஷ், கோவிலூர்.

நான் தருமபுரி மாவட்டத்தில் கொய்யா ளன் கொட்டாய் என்ற கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது பள்ளிப்படிப்பை இந்த ஆண்டு தான் நிறைவு செய்தேன் (2020-2021). பெரியாரியல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டதில் பெரியார், அம்பேத்கர் மற்றும் இன்னும் பலர் பற்றி தெரிந்து கொண்டேன். திராவிடத்தை பற்றியும் தெரிந்து கொண் டேன். இக்குறுகிய காலத்தில் பெரியாரைப் பற்றி  தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த அனை வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்.

-.ரேவதி, கொய்யாளன்கொட்டாய்

வணக்கம். என் பெயர்  மங்கையர் அரசி என் சொந்த ஊர் புதுச்சேரி. நான் புதுச்சேரி அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் LLM  முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன்.  தர்மபுரி பெரியாரியல் வகுப்பில் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் வாழ்க்கை வர லாற்றைப் பற்றியும்  அவரின் கொள்கை களைப் பற்றியும்  தெரிந்து கொண்டேன். மேலும் இந்த வகுப்பில்  பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை களைப் பற்றியும் ஜாதி   ஒழிப்பிற்காக பெரியார்  நடத்திய போராட் டங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். என் சிறுவயதிலிருந்தே பெரியார் ஏன்  அரசியல் சாசனத்தை எரித்தார்,  சமூகத்தில் ஏன் சிலர் பெரியாரை வெறுத்து வருகின்றனர், எதற்காக அவரின் கொள்கைகளை  ஏற்க மறுக்கின்றனர்  என பல கேள்விகள் இருந்தது. ஆனால் இப்பொழுது அவை அனைத்திற்கும் விடை இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பில் எனக்கு கிடைத்தது.  இதில்  ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பாடம் எடுத்து வந்த  அனைத்து ஆசிரியர்களும் மிக சிறப்பாக எங்களுக்கு எளிதில் புரியும் படி பாடம் எடுத் தார்கள். நாங்கள் இந்த வகுப்பை இணைய வழியில் கவனிப்பதற்காக எங்களுக்கு  15 நாட்களுக்கு இன்டர்நெட் டேட்டா ரீசார்ஜ் செய்து கொடுத்தார்கள். அதுமட்டுமின்றி இந்த வகுப்பில் கடவுள் மறுப்பு பாடல், எங்களுக்கு பிடித்த கவிதைகள்,பாடல்கள் என எங்கள் தனித் திறமைகளையும்  இதில் காட்டிவருகிறோம் அதற்கு  Google pay மூலம் எங்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.  இந்தப் பெரியாரியல் பயிற்சி வகுப்பை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வருகின்ற மாவட்ட தலைவர்கள்,கழக ஒருங்கிணைப் பாளர்கள்  அனைவருக்கும் என்  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

-மங்கையர் அரசி,  புதுச்சேரி

நான் அரூர் வட்டம் கட்டரசம்பட்டி கிராமத்தை சார்ந்தவன். சிறுவயதில் இருந்தே பெரியார் அம்பேத்கர் கொள்கையில் நாட்டம் அதிகம் எனினும் திராவிடர் கழகம், நீதிக்கட்சி ஆகியவற்றைமேலோட்டமாகத்தான் தெரியும் இந்த வகுப்பின்  மூலம் மேலும் அதிகமாக தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத் தது. மேலும் திராவிடத்தின் கொள்கைகளை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. பெரியார் அம்பேத்கர் கொள்கைகளை என்னைச் சுற்றி இருப்பவர்களிடம் பிரச்சாரம் செய்வது என்னுடைய பழக்கம். இந்த வகுப் பின் மூலம் இன்னும் அதிகமாக தெரிந்து கொண்டேன் எனவே இன்னும் அதிக செய்தி களை நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள இந்த வகுப்பு உதவியாய் அமைந்துள்ளது. இந்த வகுப்பை இணைய வழி மூலமாக நடத்தி வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் நிறைய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி

-தமிழன், கட்டரசம்பட்டி

நான் ஒரு பார்ப்பன வெறுப்பாளன். பெரியாரியல் பயிற்சி வகுப்பு மூலம் திரா விடம் என்பதின் உண்மை பொருள் தெரிந்து கெண்டோம். பிள்ளையார் சிலை உடைப்பு, மனுதர்ம நகல் எரிப்பு, அரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சி, கம்யூனல் ஜி.. அரசியல் சட்டத் திருத்தம் போன்ற பல தலைப்புகளில் தகவல்களை தெரிந்து கொண்டோம்.

பத்திரிகையின் முகப்பில்,கடவுள் துணை என்று முன்பு போடுவார்களே அந்த இடத்தில் பாராட்டி போற்றி வந்த பழமை லோகம், ஈரோடு பூகம்பத்தால் இடியுது பார் என்று எழுதி இருப்பார் கலைஞர் என்ற தகவலை அறிந்து கொண்டேன்.

திராவிட தொண்டன் ஆக விரும்புகி றேன். அதற்கு வாய்ப்பு அளித்து உதவிய பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், சேலம் மண்டலம் திராவிடர் கழகத்தின் தோழர்கள் அனைவருக்கும் என் நன்றி!

- எஸ்.திராவிட முருகன், மாணவன்,

சேலம் மண்டலம்

இன்றைய வகுப்பானது மிகவும் பயனுள் ளதாக அமைந்திருந்தது. இதுவரைக்கும் நாம் (பெரியாரியல் படிப்பவர்கள் உட்பட) நமக்கே தெரியாமல் கடைபிடிக்கக் கூடிய ஆதிக்கத் தன்மை போக்கைப் பட்டவர்த்தனப் படுத்திய தோடு இனி அத்தகு நடவடிக்கைகளையும் விட்டொழிய வேண்டும் என்ற எண்ணத்தை இதயத்தில் துளிர்விடச் செய்துள்ளது. பெண் ணியம் தொடர்பான முற்போக்கு கோட்பாடு களை, சட்ட வரைவுகளை, திராவிட கட்சிகள் ஏற்படுத்திய பரிணாம செயல்பாடுகளைப் படக் குறிப்புகளுடன் விளக்கியது தெள்ளிதின் புரி தலை ஏற்படுத்தியது... தோழர் அவர் களுக்கு நன்றிகள்.

- பூ. இரவிக்குமார், எம்., பி.எட்

கோட்டாத்தூர் - திருச்சி


No comments:

Post a Comment