மனித உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை எச்சரிக்கும் புதிய கருவி கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 22, 2021

மனித உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை எச்சரிக்கும் புதிய கருவி கண்டுபிடிப்பு

விழுப்புரம், ஜூன் 22- விழுப் புரத்தை சேர்ந்தவர் முக மது சாகுல்(25). பொறியா ளரான இவர், மனித உட லில் ஆக்சிஜன் பற்றாக் குறையை உடனே எச்ச ரிக்கும் புதிய கருவியான ஆக்சிஜன்அலர்ட் சேஃப்டி டிவைஸ் ஒன்றை ஸ்மார்ட் வாட்ச் வடிவில் கண்டுபிடித்துள்ளார். இந்த சாதனத்தில் சிம் கார்டு ஒன்று பொருத்தப் பட்டுள்ளது. கையில் வாட்ச் கட்டுவதை போல, இந்த சாதனத்தை அணிந்து கொள்ள வேண்டும். அப் படி அணிந்து கொள்ப வருக்கு, அவருடைய உட லில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் தெரிய வரும்.

அதாவது, ஆக்சிஜன் அலர்ட் சேஃப்டி டிவை சில் பொருத்தப்பட்டுள்ள சிம் கார்டில், யாருடைய எண்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதோ, அந்த எண்களுக்கு முதலில் மெசேஜ் போகும். அடுத்து அழைப்பு  போகும். அதன் பிறகு அவர்களுடைய செல்போன் வைப்ரேட் ஆகும். இதையடுத்து சம் பந்தப்பட்ட நபருக்கு உட லில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரிய வரும்.

வீட்டில் தனியாக இருப்பவர்கள், இதனை வாங்கி கையில் அணிந்து கொண்டால், அவர்க ளுக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரிய வந்தால், உடன டியாக அதில் பதிவு செய் யப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர்  மற்றும் உறவினர்கள் எண்களுக்கு தகவல் போய் சேரும். அப்போது, உடனடியாக அவர்கள் வந்து, சம்பந்தப் பட்ட நபரை காப்பாற்று வதற்கு ஏதுவாக இருக் கும்.

காப்புரிமை வழங்க கோரிக்கை: முகமது சாகுல், ஏற்கெனவே கல் லூரியில் படிக்கும்போது கார் விபத்தை தடுக்கும் கருவி ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளார். கரோனா நோயாளிக ளுக்கு உணவு மற்றும் மருந்து வழங்கும் மினி கார் ஒன்றை ரிமோட் மூலம்  இயக்குவ தையும் கண்டுபிடித்துள்ளார்.

No comments:

Post a Comment