ஜெனீவா, ஜூன் 26- உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய்த் தடுப்பு மய்யம் தரப்பில் கூறும்போது, “டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 85 நாடுகளில் டெல்டா கரோனா வைரஸ் கண்டறியப்பட் டுள்ளது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதில் டெல்டா வைரஸ் அதிக தொற் றுத் தன்மை கொண்டதாக உள்ளது. டெல்டா வைரஸ் பரவுதலில் இதே நிலை தொடர்ந்தால் உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், டெல்டா வைர ஸால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரி வில் அனுமதிக்கப்படுவதாக ஆய் வுகள் தெரிவிக்கின்றன” என்று தெரி விக்கப்பட்டுள்ளது. உருமாறிய கரோனா வைரஸ்கள், கிரேக்க எழுத் துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து, உருமாறிய கரோனா வைரஸ்களுக்குப் பெயரையும் வெளியிட்டது. மேலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உரு மாற்றம் அடைந்த கரோனா வைரசுக்கு லாம்ப்டா என்று பெயர் வைக்கப்பட் டுள்ளது. பன்னாட்டளவில் கரோனா வைரஸால் 17 கோடி பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்துள் ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமான வர்கள் பலியாகி உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment