பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைத் தொடக்கம் இணைய வழியில் ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம். இணைய தளம்: http//tn.gptc.com
குண்டர் சட்டம்
சென்னை கே.கே. நகர் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், ராஜகோ பாலன் குண்டர் சட்டத் தில் சிறை.
டெல்டா பிளஸ்
டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிய சென்னையில் இரண்டரைக் கோடி ரூபாயில் ஆய் வகம்.
எச்சரிக்கை
உலகில் 85 நாடுகளில் டெல்டா வைரஸ் பரவியது.
பெட்ரோல் விலை
தமிழ்நாட்டில் 13 மாவட்டங் களில் பெட்ரோல் விலை ரூ.100 அய்த்தாண்டியது.
ரூ.25,689
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அதிக விலைக்கு மின்சாரம் கொள் முதல் உள்ளிட்ட பல்வேறு கார ணங்களால் ரூ.25,689 கோடி அரசுக்கு இழப்பு.
குணம் பெற்றார்
டெல்டா பிளஸ் குறித்து கவலை வேண்டாம். சென்னையில் செவிலியர் ஒருவருக்கு இந்நோய்த் தொற்றி, உரிய மருத்துவ உதவி யால் நலம் பெற்றார் என்கிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
பறக்கும் தட்டு?
குஜராத்தில் 2 மாவட்டங்களில் வானில் பறந்த தட்டுகள் போன்ற அடையாளம் தெரியாத பொருள் களைப் பார்த்து பரபரப்பு ஏற்பட் டது. வேற்றுக்கிரகவாசிகளின் கை வேலை என்கிற அளவுக்குச் சென் றது. செயற்கைக் கோளில் இருந்து வெளிப்பட்ட வெளிச்சம் தான் அது என்று பிறகு உறுதி செய்யப் பட்டது.
தடுக்கப்படும்
மேகதாதுவில் அணை கட்டும் கருநாடக மாநில அரசின் நடவடிக் கையைத் தடுப்போம் என்று சட்டப் பேரவையில் கூறினார் அமைச்சர் துரைமுருகன்.
இது அதிகம்
2021 மே 31 நிலவரப்படி இந்தி யாவில் உறுதி செய்யப்பட்ட கரோனா பாதிப்பு 2,60,47,534. உயிரிழப்பு 3,29,100. இந்தியாவில் நடைபெற்ற அய்ந்து போர்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட இது அதிகமாம்!
'நீட்' தேர்வு
‘நீட்' தாக்கம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை கொடுக்க நிய மிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலை மையிலான குழுவிடம் இது வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
விஜய்மல்லையா
வங்கிகளில் கடன் வாங்கி வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவின் ரூ.5,800 கோடி பங்குகள் விற்பனை.
No comments:
Post a Comment