புதுத் திட்டம்
* கோவில்களைவிட்டு
வெளியேறவேண்டும் - தி.மு.க.
அரசுக்கு பா.ஜ.க.
மாநில தலைவர் முருகன் கோரிக்கை.
>> ஆமாம், அப்பொழுதுதான் அவர்கள் கொள்ளை அடிக்க முடியும்.
நல்ல
அறிகுறி
* தமிழ்நாட்டில்
மருத்துவமனைகளில்
30,002 படுக்கைகள் காலி!
- மா.சுப்பிரமணியன்,
மக்கள்
நல்வாழ்வுத் துறை அமைச்சர்
* மருத்துவ ‘மராத்தான்' ஓட்டத்தில் கூடுதல் வெற்றி!
எதற்கு
அவகாசம்?
* அதிக
அளவில் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அவகாசம் கேட்கிறது.
>> கரோனா அவகாசம் கேட்டா தொற்றும்?
அழுகல்
சமாச்சாரம்
* வேப்ப
மரத்தில் பால் - சென்னை காசிமேட்டில் வழிபாடு.
>> வேப்ப மரத்தின் அழுகிய திசுக்களின் வழியல் என்று தாவர இயல் அறிஞர்கள் சொல்லி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டனவே!
No comments:
Post a Comment