முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை,
ஜூன் 5 தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகத்தில்
கரோனா பரவலின் வேகம் 2 வாரங்களுக்கு முன்பு மிக கடுமையாக இருந்தது. நாளொன்றுக்கு தொற்று ஏற்படக் கூடியவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு கடந்த மே 24 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.
இதுபற்றி
குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
இது முழு திருப்தி அளிக்க வில்லை என்று குறிப்பிட்டார். எனவே, தொற்று பரவலின் வேகத்தை மேலும் கட்டுப்படுத்தவும், கரோனா பரவல் சங்கிலியை உடைக்கவும் கூடுதலாக, அதாவது மே 31 ஆம் தேதியில் இருந்து ஜூன் 7 ஆம் தேதிவரை (வரும் திங்கட்கிழமை) மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீடிக்கும் என உத்தரவிட்டார்.
தற்போது
நீடிக்கும் முழு ஊரடங்கிலும் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் (3.6.2021) 24 ஆயிரமாக குறைந்து வருகிறது. படிப்படியாக அதிகரித்து உச்சநிலையை எட்டியுள்ள கரோனா பரவலை கீழே கொண்டு வருவதில் அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது.
எனவே,
இந்த வேகத்தை விட்டுவிடாமல் இருக்க என்ன செய்யலாம்? என்று ஆலோசிப் பதற்காக நேற்று (4.6.2021) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தலைமையில் உயர் அதிகாரிகளை கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த
கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, காவல்துறை
இயக்குநர் திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர்ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக
இந்த முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிக்கலாமா? என்று நேற்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் சில மாவட்டங்களில் மட்டும் அதிக தொற்று பரவல் இருப்பது எடுத்துரைக்கப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று
குறைந்திருப்பதும் கூறப்பட்டது.
இதை
தொடர்ந்து சில தளர்வுகளுடன்
மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் இன்று (5.6.2021) மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெளியிட்டுள்ளார்.
அதன்
விவரம் வருமாறு:-
தமிழகத்தில்
ஜூன் 14 வரை சில தளர்வு களுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கோவை,
ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி.
தொற்றுக்
குறைவாக உள்ள மாவட்டங்களில்...
தொற்று
குறைவாக உள்ள மாவட்டங் களில் தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க் கண்ட செயல்பாடுகளுடன் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
தனியாக
செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
காய்கறி
பழம் மற்றும் பூ விற்பனை செய்யும்
நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
மீன்
சந்தைகளை மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி.
இறைச்சிக்
கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி.
தீப்பெட்டி
தொழிற்சாலைகள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி.
அனைத்து அலுவலகங்களும்
30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
சார்
பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 50 சதவிகித டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
மின்
பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் பணிபுரிய
அனுமதி.
மின்
பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
மிதிவண்டி
மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
ஹார்டுவேர்
கடைகள் செயல்பட அனுமதி.
வாகனங்களின்
உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி செயல்பட அனுமதி.
கல்விப்
புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி.
வாகன
விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மய்யங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) செயல்பட அனுமதி.
வாடகை
வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல
அனுமதி. மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று நபர்களும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பேர் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment